சொந்தப்படம்… நாத்திகர் பாலா ஆத்திகர் ஆனார்?
‘பாய்ஸ்’ படத்தில் செந்தில் செல்வாரே, ‘இம்பிருமேசன்….’ என்று. அதே ஸ்டைலில் இந்த வார்த்தையை படிக்கவும். ‘ரெகும்டேசன்ன்ன்ன்….’
‘கயல்’ படத்தில் அறிமுகமாகும் ஆனந்திக்குதான் கோடம்பாக்கத்தில் பலத்த ‘ரெகமன்டேஷன்’. இந்த தலையாய பணியை தயங்காமல் செய்து வருகிறார் அப்படத்தின் இயக்குனர் பிரபுசாலமன். இந்த படத்தின் அறிமுக விழாவில் ஆனந்தியின் கண்ணை குளோஸ் அப்பில் காட்டியதோடு சரி. அதற்கப்புறம் ஒன்னையும் காட்டவில்லை அவர். பிரமோஷன் வேலைகள் இன்னும் ஆரம்பிக்கவில்லை. ஆரம்பித்தால் திரும்புகிற இடமெல்லாம் ஆனந்தியாக இருப்பார். இருக்கட்டும்… அப்படியே ஒரு நல்ல செய்தி.
டைரக்டர் பாலா தயாரிப்பில் களவாணி சற்குணம் ஒரு படத்தை இயக்குகிறார் அல்லவா? இந்த படத்தில் அதர்வாவுக்கு ஜோடியாக நடிக்க ஊரெல்லாம் பெண் தேடினார்களாம். அந்த நேரத்தில்தான் ஆனந்தி ஓ.கேவா என்றாராம் பிரபு சாலமன். படப்பிடிப்பில் ஆனந்தியின் உற்சாகமும், சடக்கென கேரக்டரை உள்வாங்கிக் கொள்கிற அழகும் கயல் யூனிட்டை கவர்ந்திருக்க, 100 மார்க் போட்டு அனுப்பி வைத்திருக்கிறார்கள். இந்த படத்தின் பூஜையில் நாத்திகரான பாலா, கண்களை மூடி நெஞ்சுருக பிரார்த்தனை செய்து கொண்டதெல்லாம் கண்காட்சியில் வைக்க வேண்டிய அற்புதமான போட்டோ மெமரிகள்!
சொந்த காலில் சொறியெடுக்கும் போதுதான் நகத்தை பற்றிய நினைப்பே வரும். பாலாவின் பிரார்த்தனையும் ஆன்மீகமும் அப்படிதான் போல…!