சூர்யாவை தவிர நம்ம பயலுக எல்லாரையும் கூப்பிடு! பாலாவின் மெகா பிளான்!!
பாலா படத்தின் ஹீரோக்கள் எங்கு தென்பட்டாலும், “பாலா ஷுட்டிங் ஸ்பாட்ல படுத்தி எடுத்துட்டாராமே? திரும்பவும் கூப்பிட்டா போவீங்களா?” என்ற கேள்வியை கேட்காமல் நகர்வதில்லை பிரஸ்! அவர்களும், “பாலா எப்ப கூப்பிட்டாலும் நாங்க ரெடி…” என்பார்கள் சொல்லி வைத்தார் போல. அவர்கள் சொன்னதெல்லாம் நிஜம்தான் போலிருக்கிறது. பாலா அடுத்ததாக இயக்கவிருக்கும் படத்தில், சூர்யாவை தவிர அவர் படத்தில் நடித்த மற்ற ஹீரோக்கள் அத்தனை பேரும் இருப்பார்கள் என்ற சூழ்நிலை உருவாகிக் கொண்டிருக்கிறது.
விஷால், ஆர்யா, விக்ரம், அதர்வா, மற்றும் பாலா மீது தீராத கிரேஸில் இருக்கும் பிற நட்சத்திரங்களும் இணைந்து கொள்ளப் போகிறார்களாம். குறிப்பாக விஷால் கோஷ்டியை சேர்ந்த விஷ்ணுவிஷால், விக்ராந்த் கூட இந்த லிஸ்ட்டில் உண்டு என்கிறது ரகசிய தகவல்கள்.
இவ்வளவு பேரையும் கட்டி மேய்க்கணும்னா அதுக்கேற்ற கதை வேணுமில்லையா? யெஸ்… பல வருஷங்களாக கமல் போன்ற மகா மகா நடிகர்களின் மனசை கொள்ளையடித்த ‘குற்றப் பரம்பரை’ கதையைதான் படமாக்கப் போகிறாராம் பாலா.
சாதியை உயர்த்திப் பிடிக்கும் கதைகளை எப்போது சினிமா தொட்டதோ, அப்போதிலிருந்தே நாடு முழுக்க கலவரங்களுக்கும் கல் வீச்சுகளுக்கும் பஞ்சமேயில்லை என்ற நிலைமை. இதில் குற்றப்பரம்பரை என்ன மாதிரியான விளைவுகளை ஏற்படுத்துமோ?