ஆபாசம் ஆபாசம்! சிம்புவை மிஞ்சினாரா பாலா?

‘பாத்ரூம்ல பாடுனேன்… பல்லு விளக்கிகிட்டே பாடுனேன்’ என்றெல்லாம் சிம்பு சமாளித்து வந்தாலும், அந்த பீப்… சிம்புவுக்கு மட்டுமல்ல, நான் ஹீரோ என்று சொல்லிக் கொள்ளும் ஒவ்வொருவருக்கும் அவமானம்! அந்த அழுக்கு போவதற்குள் அடுத்த அழுக்கை இறக்குவார் போலிருக்கிறது பாலா! தனது ‘தாரை தப்பட்டை’ படம் மூலம் பாலா விதைத்திருப்பதாக கோடம்பாக்கத்தில் உலா வரும் செய்திகள் அவ்வளவு இதமாக இல்லை. படத்தில் இடம்பெற்றிருப்பதாக சொல்லப்படும் வசனங்களும், பாடல் வரிகளும் அவரது புகழுக்கு அழகல்ல. அசிங்கம்! ஒருவேளை படத்திலிருந்து அது நீக்கப்பட்டிருந்தால் இந்த செய்திக்காக முன் கூட்டியே ஒரு ஸாரி. இல்லையென்றால், கடுமையான ஒரு கண்டனம்!

பொதுவாகவே கரகாட்டக் கலைஞர்கள் பிழைப்புக்காக செய்து கொண்டிருந்த ஆபாசத்தை, போலீஸ் நுழைந்து தடுக்கிற அளவுக்கு போயிருக்கிறது நிலைமை. தமிழக அரசே இதுபோன்ற ஆட்டங்களுக்கு கடும் தடையை விதித்திருக்கிறது. இந்த நிலையில் நான் யதார்த்தத்தை சொல்கிறேன் பேர்வழி என்று சிம்பு வழியை நாடியிருக்கிறாராம் பாலா. பொதுவாகவே பாலா படம் என்றால் அதில் வரும் வன்முறைக்கு அஞ்சி பெண்கள் கூட்டம் தியேட்டருக்கு வராது. இதில் இரட்டை அர்த்தம் கூட இல்லை. நேரடியாக ஒரே அர்த்தம் வருவது போல அவர் வசனங்களை பேச வைத்திருந்தால் முடிந்தது பெண்கள் ஓட்டு!

அப்படியென்ன வரிகள் அவை? சாம்பிளுக்கு நாலே நாலு வரி… செரச்சி வச்சிருக்கேன்…செரச்சி வச்சிருக்கேன்… 2 ரூவா பிளேடு வாங்கி செரச்சி வச்சிருக்கேன்…” என்பதுதான் அது. ஒரு பெண் பாடுவதாக வரும் இந்த வரிகளுக்கு இசையமைக்கவே மறுத்துவிட்டாராம் இளையராஜா. படம் முடிகிற தருவாயில் இளையராஜாவுக்கும் பாலாவுக்கும் இடையே பலத்த மனக்கசப்பு என்றும் கூறுகிறார்கள். அதனால்தான் இந்த படத்தின் பிரமோஷன்களுக்கு ராஜா வரமுடியாது என்று மறுத்துவிட்டதாகவும் கூறுப்படுகிறது. பாலாவும் இந்த படம் தொடர்பாக எந்த மீடியாவையும் சந்தித்ததாக தெரியவில்லை.

பாலாவை நம்பிப் போட்ட சசிகுமார் பணம், கட்டுக்கட்டாக திரும்பி வருகிறதா, அல்லது வெறும் காகிதமாக கரைந்து ஒழிகிறதா என்பதை தானா தப்பன்னாவின் ஆபாச அளவுதான் முடிவு செய்யும் போலிருக்கிறது.

2 Comments
  1. Bala says

    Enna, Vilambaram kodukkatha Gaanda Mr Anthanan & Co? Thooo!

  2. Sathik Batsha says

    UNMAIYAI SOLKIRAAR ATHIL KANDU ENKE VANTHATHU.

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
Pattinapakkam Movie Pooja Stills

Close