‘கத்துக்குட்டி’ திரைப்படம் பற்றி இயக்குனர்கள் பாரதிராஜா, சசிகுமார், சீமான் மற்றும் நடிகர் சூரி

இயக்குநர் பாரதிராஜா:
”அட்டகாசமான வாழ்வியல் கதையைச் சமூக அக்கறையுடன் சொல்லி இருக்கிறார் அறிமுக இயக்குநர் சரவணன். புதுவிதமான சிந்தனையை வயிறு குலுங்க வைக்கும் நகைச்சுவையோடு சொல்லியிருப்பது பாராட்டுக்குரியது. நகைச்சுவை நடிகர் சூரி வரும் ஒவ்வொரு காட்சியும் தியேட்டரே குலுங்கும். உடல்மொழியில் சூரி விளையாடி இருக்கிறார். நல்ல கருத்தைப் போதனையாகச் சொல்லாமல் பொழுதுபோக்குச் சித்திரமாகச் சொல்லி அசத்தியிருக்கிறார்கள். அனைவரும் பார்க்க வேண்டிய அற்புதமான படைப்பு கத்துக்குட்டி!”
இயக்குநர் சசிகுமார்:
”கத்துக்குட்டி படத்தின் சிறப்பு காட்சியைப் பார்த்தேன். இன்றைய தலைமுறைக்குத் தேவையான அவசியமான கருத்தை கொஞ்சமும் போரடிக்காமல் சீனுக்கு சீன் சிரிப்பாகவும் விறுவிறுப்பாகவும் சொல்லி இருக்கிறார்கள். திரைக்கதையில் இது நிச்சயம் புதுமையான பாணியாகப் பேசப்படும். தஞ்சாவூர் வாழ்வியலை மிக அற்புதமாகக் காட்சிப்படுத்தி, நம்மையும் அங்கேயே வாழ்வது போலாக்கிவிடுகிறது இந்தப் படம். நல்ல கருத்தும் நகைச்சுவையுமாய் கத்துக்குட்டி நிச்சயம் எல்லோரையும் கவர்ந்திழுக்கும். அறிமுக இயக்குநர் இரா.சரவணனுக்கு மிகப்பெரிய மரியாதையை இந்தப் படம் நிச்சயம் ஏற்படுத்திக் கொடுக்கும்!”
நடிகர் சூரி:
”இத்தனை நாள் வரை எந்தப் படத்தையும் பார்க்கச் சொல்லி நான் ரசிகர்களை வற்புறுத்தியது இல்ல. அதில, எனக்கு விருப்பம் இருந்ததும் இல்ல. இருந்தாலும் ‘கத்துக்குட்டி’ படத்தை எல்லாரும் பார்க்கணும்னு உங்களைக் கையெடுத்துக் கும்பிட்டுக் கேட்டுக்கிறேன். காரணம், இந்தப் படம் எல்லாரையும் போய்ச் சேர வேண்டிய படம். படம் முழுக்கச் சிரிக்கச் சிரிக்க நகைச்சுவையா இருந்தாலும், நல்ல கருத்தை சொல்ல வேண்டிய இடத்துல சரியாச் சொல்லி இருக்காங்க. இந்தப் படத்துல நடிச்சதை நான் பெருமையாவும் பாக்யமாவும் நினைக்கிறேன். நீங்க இந்தப் படத்தைப் பார்க்கிறப்ப, நான் இந்தளவு பெருமைப்படுறதுக்கான காரணத்தை நேரடியா புரிஞ்சுக்குவீங்க!”
இயக்குநர் சீமான்:
”சமீபத்தில் பார்த்த படங்களில் என்னைச் சிலிர்க்க வைத்த காவியம் ‘கத்துக்குட்டி’. விவசாயம் சார்ந்த கதையை இந்தளவுக்குச் சுவாரசியமாகவும் நுட்பமாகவும் அட்டகாசத் திருப்பங்களுடனும் சொல்லி இருப்பது வியக்க வைக்கிறது. இன்றைய தமிழ்த் திரையுலகத்தின் இளைய பிள்ளைகள் மீதான நம்பிக்கையை இந்த கத்துக்குட்டி அதிகமாக்கி இருக்கிறது. ஒவ்வொரு தமிழனும் பெருமிதமாகப் பார்க்க வேண்டிய அருமையான படம் கத்துக்குட்டி!”

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
வந்திருச்சே வேதாளம் டீசர்!

https://youtu.be/b3WB7ogte-g

Close