சிம்பு பாடலுக்கும் சிவகார்த்திகேயனுக்கும் முடிச்சு! நம்புதுடா உலகம்? இது நாரதர்கள் கலகம்!

‘குட் பாய்’ இமேஜ் யாருக்கெல்லாம் இருக்கிறதோ, அவர்களெல்லாம் சிம்புவின் பீப் பாடல் பிரச்சனை ஓய்கிற வரைக்கும் நாலு சுவற்றுக்குள்ளேயே அடைபட்டு கிடப்பது சாலச் சிறந்தது! ஏனென்றால் மிரள்ற மாடு புடவைய கண்டுச்சா, வேட்டிய கண்டுச்சான்னு கண்டபடி யார் யார் மீதோ தாவுகிறது வதந்தி! அப்படி சிக்கிக் கொண்டவர்தான் சிவகார்த்திகேயன். கடந்த 24 மணி நேரமாக இவர் தலையைதான் போட்டு உருட்டிக் கொண்டிருக்கிறார்கள் சமூக வலைதள போராளிகள். அனிருத் அந்த பாடலை சிவகார்த்திகேயனுக்கு அனுப்பியதாகவும், அதை அவர் தன் நண்பர்களுக்கு அனுப்பியதாகவும் அப்படியே தாவி தாவி யூட்புக்கு சென்றதாகவும் கட்டுக்கடங்காத கட்டுக்கதை ஒன்றை அவிழ்த்துவிட்டிருக்கிறது ஒரு கும்பல்!

இதில் சிவகார்த்திகேயன் தரப்பு ஏகத்திற்கு அப்செட் என்கிறார்கள்.

அடிப்படையில் ஒரு நல்ல போலீஸ் ஆபிசரின் மகன்தான் சிவகார்த்திகேயன். காக்கிகளில் சற்று கரைபடாத மனிதர் என்று இப்போதும் அவருடன் பணியாற்றிய காவலர்கள் அவரை பற்றி நினைவு கூர்ந்து வருகிறார்கள். அப்படிப்பட்ட போலீஸ் ரத்தம் இப்படியொரு வேலையை செய்திருக்காது என்பது ஒரு புறம். மொசப்புடிக்கிற டேஷ்ஷை மூஞ்சியை பார்த்தாலே தெரியும் என்பதாலும் இந்த வதந்தியை பெரும்பாலும் யாரும் நம்பவில்லை.

இந்த நேரத்தில் நல்லவேளையாக சிம்புவே தன் ட்விட்டருக்குள் வந்து, ‘இதுக்கும் சிவகார்த்திகேயனுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை’ என்று கூறியிருக்கிறார்.

மூக்குக்கு வந்தது நுனியோட போச்சு!

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
சிம்பு எந்நேரத்திலும் கைதாகலாம்! சட்டென்று மாறுது வானிலை

டேஷ் பாடலுக்கு எதிராக சிம்பு மீது தொடரப்பட்ட வழக்கில் முன் ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்திருந்தார் சிம்பு. அது இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது...

Close