இதனால் சகலமானவர்களுக்கு தெரிவிப்பது என்னவென்றால்…? அனன்யா கால்ஷீட்டா? ஆபத்து ஆபத்து!

‘எங்கேயும் எப்போதும்’ படத்திற்கப்புறம் அனன்யா என்றால் ‘ஹைய்யோ லட்டு’ என்று விழிகளை மலர்த்தினார்கள் ரசிகர்கள். அதற்கப்புறம் அவர் நடித்த படங்களில் பல, பலாச்சுளை தோலுக்கு கூட நிகராக இல்லை. நடுவுல கொஞ்சம் ஆளைக்காணோம் ரேஞ்சுக்கு அவரது கல்யாண களேபரம் வேறு. எப்படியோ? புதைந்து போன அனன்யாவின் மார்க்கெட்டை தோண்டி துருவி எடுத்துக் கொண்டு வர நினைத்த ஒரு சில தயாரிப்பாளர்களில் அதிதி தயாரிப்பாளரும் ஒருவர்.

பாம்புக்கு பல் செட் மாட்ட கிளம்பியது மாதிரியாகிவிட்டதாம் அதற்கப்புறம் நடந்ததெல்லாம். இந்த படத்தின் ஷுட்டிங்குக்காக ஒரு ஓட்டலில் போய் தங்கினார்களாம். சற்றே விலை உயர்ந்த ஓட்டல் அது. டேரிஃப் ஜாஸ்தி என்றால் அவருக்கென்ன? அவர் வைத்த செலவுகள் எக்ஸ்ட்ரா பத்து லட்சம் ஆகிவிட்டது என்று கவலைப்படுகிறார்கள் இப்போது. ஓட்டலுக்கு சொந்தமான காரை எடுத்துக் கொண்டு ஊர் சுற்ற கிளம்பிவிடுவாராம். போகிறவர் சும்மா போகாமல் ‘தயாரிப்பாளர் கணக்குல சேர்த்துக்கங்க. இப்போதைக்கு கொஞ்சம் கேஷ் கொடுங்க’ என்று ஓட்டல் நிர்வாகத்திடமே பணம் வாங்கிக் கொண்டு கிளம்பிவிடுவாராம்.

தர வேண்டாம் என்று தயாரிப்பாளர் ஓட்டல் நிர்வாகத்திடம் சொன்னால் வருமாம் வினை. அதற்கப்புறம் ஒவ்வொரு நாளும் ஷுட்டிங் ஸ்பாட்டுக்கு வர ரெண்டு மணி நேரம் தாமதம் செய்வாராம். தயாரிப்பாளரோ, இயக்குனரோ போன் அடித்தால் எடுக்கவும் மாட்டாராம். உதவி இயக்குனரை ஓட்டலுக்கு அனுப்பி அழைத்து வர செய்தால், வந்த உதவி இயக்குனரை மூன்று மணி நேரம் காக்க வைப்பாராம். நேத்து ஜுஸ் கேட்டேன். ஐந்து நிமிஷம் லேட். இப்ப என்ன செய்வீங்க என்கிறாராம் நக்கலாக. இப்படி வயிற்றிலும் மார்பிலும் அடித்துக் கொள்ளாத குறையாக அனன்யாவின் கேரக்டர் குறித்து அழும் தயாரிப்பு வட்டாரம், அனன்யாவை வச்சு படம் எடுக்கணும்னு யாராவது நினைச்சா, காசியில பிச்சையெடுத்து சகாராவுல பொங்கி திங்கறதுக்கு சமம் என்கிறார்கள் அதிர்ச்சி விலகாமல்.

இந்த லட்சணத்தில் இவர் தங்கியிருக்கும் ஒட்டலில் அவரது கணவர் ஆஞ்சநேயலுவும் வந்து தங்கிக் கொள்வாராம். அவர் ஊதி தள்ளும் சிகரெட்டே பல ஆயிரம் பில்லை தலையில் கட்டிவிடுகிறது என்கிறார்கள் அதிதி வட்டாரத்தில்.

அனன்யா கால்ஷீட்டுக்கு கொஞ்ச நஞ்ச ஆசைப்படுறவங்க கூட அப்படியே ஓடிப்போயிருங்க…!

Read previous post:
சீரியல் துவக்கவிழா! தனியார் தொலைக்காட்சியை வாங்கு வாங்கென வாங்கிய லிங்குசாமி

அபிராமி ராமநாதன் தயாரிப்பில் வெளிவந்த படம்தான் ‘தி பிளட் ஸ்டோன்’ என்ற ஆங்கில படம். இதில் ரஜினி ஹீரோவாக நடித்திருந்தார். சூப்பர் ஸ்டார் ரஜினி ஒரு ஹாலிவுட்...

Close