பத்து லட்சம் இருந்தால் பாபி சிம்ஹா கால்ஷீட்?

கோடம்பாக்கத்தில் புது முகங்களின் படங்கள் அவ்வப்போது ஹிட்டடித்து வந்தாலும், பழைய பஞ்சாங்கத்தை படிப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் கூடியே வருகிறது. எப்படி? காக்கா முட்டை என்றொரு படம் வந்தது. சினிமா என்றால் என்னவென்றே தெரியாத இரண்டு சிறுவர்கள் அதில் நடித்து பெரிய வசூல் ஹீரோக்களாகிவிட்டார்கள். அப்படிதான் திடீர் திடீரென புதியவர்கள் வருவார்கள். வெல்வார்கள். ஆனால் இந்த லாஜிக்கெல்லாம் புரியாமல் பணத்தை கோணி மூட்டையில் கட்டிக் கொண்டு போய் ஏற்கனவே நாலைந்து தோல்வி கொடுத்து இன்டஸ்ரியை கையேந்த வைக்கும் ஹீரோக்களின் காலடியில் கொட்டவே பிரியப்படுகிறது பலரது மனசு. இதற்கு அவர்கள் சொல்லும் காரணம், ‘படம்னா ஒரு ஓப்பனிங் வேணாமா சார்?’ என்பதுதான்.

இந்த சாக்கில் ஒன்றிரண்டு ஹிட் கொடுத்த பாபி சிம்ஹா போன்றவர்களின் பேங்க் அக்கவுன்ட் செம ஏத்தம் ஆகி வருவதுதான் ஹைய்யோ. அதிலும் பாபி சிம்ஹாவின் லாஜிக் படு ஆபத்தாக இருக்கிறது. யார் வந்து கால்ஷீட் கேட்டாலும் ‘பத்து லட்சம் அட்வான்ஸ் கொடுத்துருங்க. உங்களை லைன் அப்ல வச்சுக்குறேன். ரெண்டு வருஷம் கழிச்சு படம் பண்ணலாம்’ என்கிறாராம். ‘இப்படி தாறு மாறா அட்வான்ஸ் வாங்கிப் போட்டா ஆபத்துல முடிஞ்சுருமே?’ என்று யாராவது அட்வைசினால், ‘அட போங்கப்பா. நான் சொல்ற லாஜிக் சரியா இருக்கா பாருங்க’ என்கிறாராம். அது என்ன லாஜிக்?

‘இப்ப அட்வான்ஸ் கொடுக்கிற தயாரிப்பாளர் ரெண்டு வருஷம் கழிச்சு வரும்போது என் லெவல் நல்லாயிருந்தா அப்ப நான் வாங்குற சம்பளத்தை கேட்பேன். ஒருவேளை என் லெவல் ஊத்திக்கிச்சுன்னா, அவங்களே வர மாட்டாங்க. பத்து லட்சம் லாபம்தானே’ என்கிறாராம். அப்படி வந்து வற்புறுத்திக் கேட்டாலும், படம் பண்ணிக்கலாம் என்று சொல்வதுதான் அவரது முன்னேற்பாடு.

சதுரங்க வேட்டைக்கு சரியான ஆள் நட்டியில்ல, இவர்தான்!

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
யானும் தீயவன்… கெட்டவன் இமேஜோடு ரீ என்ட்ரியாகிறார் பிரபுதேவாவின் ப்ரோ!

கெட்டவன், மொட்ட சிவா என்று சினிமா டைட்டில்கள் ஒரு புறம் கத்தியை தீட்டிக் கொண்டிருக்க, பல காலம் ஓய்வில் இருந்த ராஜு சுந்தரமும் அப்படியொரு கெட்ட இமேஜோடு...

Close