ஷேர்னா என்னா சார்? நிருபர்களை நக்கலடித்த பாபி சிம்ஹா!

‘சென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறது’ படத்தில் நடித்திருக்கும் பாபி சிம்ஹா, டப்பிங் பேச வராததுடன், பேச அழைத்த இயக்குனரிடம், ‘வர்ற கலெக்ஷன்ல ஷேர் தர்றீங்களா?’ என்று கேட்டதை ‘பாபி சிம்ஹாவின் அராஜகம்’ என்ற தலைப்பில் செய்தியாக வெளியிட்டிருந்தோம். (https://wh1049815.ispot.cc/you-too-bobby-simha/) அதை தொடர்ந்து ‘உறுமீன்’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் இது குறித்து அவரிடம் கேள்வியும் எழுப்பப்பட்டது. அப்போது, ஷேர்னா என்ன சார்? என்று கேள்வி கேட்ட நிருபரிடமே நக்கல் அடித்தார் பாபி சிம்ஹா. இதனால் பத்திரிகையாளர் வட்டாரத்தில் அதிர்ச்சி.

உலக நாயகன் கமல்ஹாசன் கூட பத்திரிகையாளர்கள் கேள்வி கேட்டால், அதற்கு நேரடியாக பதில் சொல்லிதான் பழகியிருக்கிறாரே தவிர, இப்படியெல்லாம் குதர்க்கமாக பதில் சொன்னதில்லை. இவ்வளவு பெரிய இடத்திலிருக்கும் ஒரு வில்லன் நடிகருக்கு ஷேர் என்றால் என்னவென்றே தெரியாதாம். போகட்டும்… அதற்கப்புறம் அவர் கேட்ட கேள்விதான் செம காமெடி. ‘உங்களுக்கு தெரியுமா சார்? முதல்ல ஷார்ட் பிலிமாதான் அதை எடுத்தாங்க. அப்புறம் அதை முழு நீள படமா ஆக்கிட்டாங்க. அதை கேட்டீங்களா நீங்க?’ என்றார் மீண்டும் நக்கலாக.

அட பாபி சிம்ஹா குழந்தையே…! பீட்சாவுலேர்ந்து, முண்டாசு பட்டியிலேர்ந்து, வாயை மூடி பேசவும்லேர்ந்து வெற்றி பெற்ற அநேக படங்கள் முதலில் ஷார்ட் பிலிமாக எடுக்கப்பட்டு அப்புறம்தான் முழு நீள படமாச்சு. அப்படியிருக்கும் போது ‘சென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறது’ படத்தையும் ஷார்ட் பிலிமா ஆரம்பிச்சு முழு நீள படமா எடுக்கக் கூடாதா என்ன?

போகட்டும்…. ‘சென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறது’ படத்தின் இயக்குனர் மருதுபாண்டியன் என்ன சொல்கிறார்?

‘ஷார்ட் பிலிம்னா எதுக்கு சார் அவர் முப்பது நாளுக்கு மேல் கால்ஷீட் தரணும்? அந்த படத்தில் வரும் 115 சீனையும் அவரை உட்கார வச்சு தனித்தனியா சொல்லியிருக்கேன். ஒரு ஷார்ட் பிலிமுக்கு எதுக்கு 115 சீன் என்று அவர் கேட்டிருக்கலாமே? அது மட்டுமில்லங்க. ‘இந்த படத்துல ஹீரோயின் இருக்காங்களா… கேளுங்க’ என்று நிருபர்களிடம் கேட்டிருக்கிறார் பாபி. இல்லேன்னு அவரை சொல்ல சொல்லுங்க பார்ப்போம்..’ என்றார் ஆவேசமாக.

பசி நேரத்தில் குடித்த கஞ்சியை, ஃபைவ் ஸ்டார் ஓட்டலில் மூக்கு முட்ட சாப்பிடும் நேரத்தில் பலர் நினைத்துப் பார்ப்பதில்லை. அப்படிப்பட்டவர்களை பசியும் நீராகாரமும் பார்த்து வைத்து பழி தீர்க்காமல் விடுவதுமில்லை. பாபி சிம்ஹாவுக்கு அது புரியும் நாள் வந்து கொண்டேயிருப்பதாகதான் படுகிறது நமக்கு.

1 Comment
  1. அந்துவன் மொந்தைக்கள்ளு says

    இன்னா நைனா, கட்டிங் வர்லியா?
    பாபி மேல ரொம்பா காண்டா கீற!

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
உத்தமவில்லன் ரிலீஸ் தேதி அறிவிப்பு – தடுக்க வர்றவங்கள்லாம் ஒவ்வொருத்தரா வாங்கப்பா…?

Close