ஹீரோவாகிறார் பாபி சிம்ஹா – இசையமைக்கிறார் ஏ.ஆர்.ரஹ்மான்
ஜிகிர்தண்டா படத்தில் வில்லனாக நடித்ததிலிருந்தே பாபி சிம்ஹாவை ஹீரோவாக்கி பார்க்க துடிக்கிறார்கள் பல இயக்குனர்கள். கேரக்டர் ஆர்ட்டிஸ்டுகளுக்கெல்லாம் இப்படி ஒரே ராத்திரியில் ஹீரோ இமேஜை ஊட்டிவிட்டு நல்ல நடிகர்களை காலி பண்ணும் இது போன்ற இயக்குனர்களுக்கு அடுத்தடுத்து விக்கெட்டுகள் விழுவதுதான் ஆச்சர்யம். அதுக்குள்ளே ஹீரோவா? இன்னும் கொஞ்ச நாள் போகட்டுமே என்று சொல்ல வேண்டிய சிம்ஹாவும், நடக்கட்டும்… என்று கழுத்தில் மாலை போட்டுக் கொள்ள தயாராகிவிட்டார்.
அந்த சந்தோஷத்தில் செய்த காம்பியரிங்தான் போலிருக்கிறது ஐ பட விழா. இவரால்தான் அர்னால்டே ஓடிப்போனார் என்பதை போலவும் ஒரு கருத்து உலவுவதால், சார் இப்போது சைலண்ட் மோடில்! அதிருக்கட்டும்… மேட்டருக்கு வருவோம்.
சிம்ஹாவை ஹீரோவாக நடிக்க வைக்கப் போகும் முதல் இயக்குனர் பரத் பாலாவாம். ஏற்கனவே இவர் மரியான் என்ற படத்தை இயக்கியிருக்கிறார். ஏ.ஆர்.ரஹ்மானின் வந்தே மாதரம் வீடியோ ஆல்பத்தின் இயக்குனரும் இவர்தான். ரஹ்மானின் வெகு நெருங்கிய சினேகிதர்களில் ஒருவரான பரத்பாலாவுக்காக இந்த படத்திற்கும் இசையமைத்து தர ஒப்புக் கொண்டிருக்கிறாராம் ரஹ்மான்.
அப்படியென்றால்…? பரத்பாலாவை விட பெரிய அதிர்ஷ்டசாலி பாபி சிம்ஹாதான்!