அஜீத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்! குவிக்கப்பட்ட போலீஸ்
அடப்பாவிகளா… சிவனேன்னு இருக்கிற மனுஷனை சீண்டிப் பார்க்குறதே வேலயா போச்சா உங்களுக்கு? இப்படி அஜீத் ரசிகர்களை புலம்ப விட்டிருக்கிறார் ஒரு மர்ம ஆசாமி. அவரைத் தேடி போலீஸ் அலைந்து கொண்டிருக்கிறது. என்னவாம்?
நேற்றிரவு 108 ஆம்புலன்ஸ் சேவைக்கு போன் செய்த ஒரு போக்கிலி, அஜீத் வீட்டில் வெடிகுண்டு வச்சுருக்கேன். இன்னும் கொஞ்ச நேரத்தில் வெடிக்கும் என்று கூறிவிட்டு போனை வைத்துவிட்டானாம். உடனே தகவல் போலீஸ் அதிகாரிகளுக்கு கூறப்பட்டுள்ளது. இதையடுத்து அஜீத் வீட்டுக்கு விரைந்த போலீஸ் கடுமையாக சோதனை செய்ததாம். நல்லவேளை… ஒரு கோலி குண்டு கூட இல்லை அங்கே.
இருந்தாலும் இன்றும் அஜீத் வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. போன் செய்து கிலி ஏற்படுத்திய அந்த போக்கிலிக்கு வலை வீசிய போலீஸ், கிட்டதட்ட நெருங்கிவிட்டதாம்.
அந்த பிரகஸ்பதி முகத்தை கொஞ்சம் பேஸ்புக்ல போட்டு விடுங்களேன் போலீஸ் அதிகாரிகளே…