ஒரே டைப்பான உபத்திரவத்தை விட்டொழிங்க…!

‘இவங்க இல்லேன்னா இந்த சினிமாவே இல்ல’ என்று சொல்வதற்கு ஒரு பெரிய மனசு வேண்டும். அது இயக்குனர் கல்யாண கிருஷ்ணனுக்கு நிறையவே இருக்கிறது. பூலோகம் பிரஸ்மீட்டில் தன்னுடன் பணியாற்றிய உதவி இயக்குனர்களையும் மேடையிலேற்றினார் அவர். கடந்த ரெண்டு வருஷத்துக்கும் மேலா என்னோட இருந்து இந்த படம் உருவாகறதுக்கு இவங்க ரொம்ப கஷ்டப்பட்டாங்க. நான் சின்ன வயசில வட சென்னையில் பார்த்த குத்து சண்டைதான் இந்த படத்தின் கதை உருவாகறதுக்கு பெரிய காரணம். அப்பல்லாம் மாட்டுக் கொட்டகையிலேர்ந்து மாடுகளை அவிழ்த்து வெளியில் கட்டிட்டு, அந்த இடத்துல குத்து சண்டை மேடை போட்டு விளையாடுவாங்க. சுற்றுப்பட்டு டவுன்லேர்ந்து வர்ற வீரர்களோட பெரிய மல்லுக்கட்டு நடக்கும்’ என்று கடந்த காலத்தை அசை போட்டார் கல்யாண கிருஷ்ணன்.

அப்படியே படத்தின் ‘பேக் போர்ன் ’ஆக இருந்த நிஜ குத்து சண்டை வீரர்களையும் மேடையேற்றினார். சுமார் 90 கிலோ வரைக்கும் எடையை ஏற்றிய ஜெயம் ரவி, இந்த படத்திற்காக குத்து சண்டை கற்றுக் கொண்டாராம். இது வழக்கமான ‘கற்றுக்கொண்டாராம்…’ விஷயமல்ல, நிஜம் என்றால் நிஜமாலுமே கற்றுக் கொண்டாராம் ரவி. அது படத்தில் பல பஞ்ச்களில் அப்பட்டமாக தெரிந்தது. ‘பாக்சிங்னா அதுல வெறும் ஆறு பஞ்ச்தான் இருக்கு. அதை தாண்டி வேற ஒண்ணும் பெரிசா காட்டிட முடியாது. ஆனால் இந்த பாக்சிங்கை மையமா வச்சுகிட்டு படத்துல அவன் ஏன் அடிச்சான்? எதுக்காக அடிச்சான்னு ஒரு விஷயத்தை சொல்றாரு பாருங்க, அங்கதான் கிக்கே இருக்கு என்றார் ஜெயம் ரவி.

பாக்சிங் சாதாரண கேம் இல்ல. ரெண்டு ரவுண்டுக்கு மேல என்னால போகவே முடியல. (நான் சண்டையை சொன்னேன் என்று கொஞ்சம் அழுத்தம் கொடுத்து சிரிக்க வைத்தார் ரவி) படத்தில் த்ரிஷாதான் ஜெயம் ரவிக்கு ஜோடி. அவங்களுக்கு பைட் இல்ல. பட் என்னை குத்து சண்டை வீரனா ஆக்குறதுக்கு மோட்டிவேட் பண்ணுவாங்க என்று அவருக்காகவும் சேர்த்து பேசினார் ரவி. இந்த பிரஸ்மீட்டுக்கு த்ரிஷா வரவில்லை. அவர் அமெரிக்கா போயிருக்கிறாராம்.

எஸ்.பி.ஜனநாதனிடம் உதவி இயக்குனராக இருந்த கல்யாண கிருஷ்ணன், பேராண்மை படப்பிடிப்பின் போதே ஜெயம் ரவியிடம் இந்த கதையை சொல்லியிருந்தாராம். அதற்கப்புறம் இந்த கதையின் மீது பெரிய நம்பிக்கை வைத்து கால்ஷீட் கொடுத்திருக்கிறார் ரவி. ஆஸ்கர் ரவிச்சந்திரன் தயாரிப்பில் சுமார் 25 கோடியை விழுங்கிக் கொண்டு ரிலீசுக்கு தயாராகிக் கொண்டிருக்கிறது பூலோகம்.

கடந்த சில மாதங்களாகவே எல்லா படங்களிலும் பாடி அறுத்து தள்ளிக் கொண்டிருக்கும் கானா பாலாவை விட்டுவிட்டு இந்த படத்தில் வேறொரு கானா பாடகரின் குரலில் ஒரு பாடலை உருவாக்கியிருக்கிறார் ஸ்ரீகாந்த் தேவா. சும்மா சொல்லக் கூடாது. இந்த வருடத்தின் ஸ்பெஷல் ஹிட்டாக இருக்கப் போகிறது இது. இதற்கப்புறமாவது ஒரே டைப் உபத்திரவத்தை விட்டொழிங்கப்பா… !

பின் குறிப்பு- படத்தில் வரும் மயான கொள்ளை பாடல் ஒன்று செம மிரட்டல்! உருவாக்கிய ஸ்ரீகாந்த் தேவா குழுவுக்கும், அதில் மிரட்டல் பர்பாமென்ஸ் கொடுத்திருக்கும் ஜெயம் ரவிக்கும் இருக்குது ஒரு கொலகுத்து வெற்றி!

1 Comment
  1. anbu says

    Gnana bala kum ungalukum ethum pirachanaya? epa avar name paathalum rompa soodave avara pathi pesureenga..

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
நயன்தாரா பயமுறுத்தினால் எப்படியிருக்கும்?

விஷால் ஹீரோவாக நடித்த ‘சத்யம்’ திரைப்படத்தில் நயன்தாராவுக்கும் சின்ன சின்ன வாண்டுகளுக்கும் நடுவில் ஒரு ‘வார்’ நடக்கும். நயனை ஒரு மிக்கி மவுஸ் ரேஞ்சுக்கு குறி வைத்து...

Close