போடி வாடி அவளே இவளே… கடுப்பான த்ரிஷா! கலைஞ்சுருச்சு முழுசா?
அட்சதை போடும் போதே நாலைஞ்சு அரளிப்பூக்களையும் அள்ளிப் போடுகிற ஊர் ஆச்சே இது? த்ரிஷாவுக்கும் ஆயிரம் கோடியோ, அதற்கு மேலோ சொத்து பத்துள்ள வருண் மணியனுக்கும் கல்யாணம் என்றதும், வயிறெரிஞ்ச அத்தனை பேருக்கும் சமீபத்தில் வந்த செய்தி நல்ல செய்தியாகதான் இருக்கும். இருவருக்குமான நிச்சயதார்த்தம், அடுத்த லெவலுக்கு போகாமலே முடிந்துவிட்டது. எங்க ரெண்டு பேருக்கும் நடுவில் இருந்த உறவு முறிஞ்சுருச்சு என்று த்ரிஷாவே அந்த செய்திக்கு முற்றுப்புள்ளியும் வைத்துவிட்டார்.
ஏன் பிரிந்தாய் மகளே… ஏன் பிரிந்தாயோ? என்று கேள்வி கேட்கிற மூடிலிருக்கும் அத்தனை பிரஸ்சும் த்ரிஷாவுக்கு போன் அடித்தால், அதுக்கு மேல கேட்காதீங்க என்று கத்திரி போடுகிறார் கேள்விகளுக்கு. நிஜம் என்ன? திருமணம் நடைபெறாமல் போனதன் பின்னணி என்ன?
இதெல்லாம் நம்புற மாதிரியா இருக்கு? இருந்தாலும் கேள்விப்பட்டது, கோடம்பாக்கத்தில் கிசுகிசுக்கப்படுகிற காரணம் இதுதான். இந்த திருமண நிச்சயதார்த்தத்திற்கு முன்பு வரை த்ரிஷாவை வாங்க போங்க என்றே அழைத்து வந்தாராம் வருண். அதற்கப்புறம் மிகவும் உரிமையோடு வாடி போடி என்று அழைத்திருக்கிறார். இதிலென்ன தப்பு? இந்த டி மேட்டரை த்ரிஷாவும் ரசித்திருக்கிறார். ஆனால் எல்லாம் ஒரு கட்டம் வரைக்கும்தான்.
வெளியிடங்களுக்கு செல்லும் போதெல்லாம் எல்லாருக்கும் கேட்கிற மாதிரி நூறு டி போடுகிறாராம் வருண். ஒரு கட்டத்தில் அதற்கும் மேலே போய் அவர் வீசும் வார்த்தைகள் த்ரிஷாவை நிலை குலைய வைத்ததாக சொல்கிறார்கள். இது நமக்கு சரிப்படாது. கஞ்சோ, கூழோ…(?) சொந்த வயித்தோடு போகட்டும் என்ற முடிவுக்கு வந்த த்ரிஷா, கைக்கு அடக்கமான பையன் வரும்போது வரட்டும். முதலில் இந்தாளை கட் பண்ணுவோம் என்ற முடிவுக்கு வந்தாராம்.
குறட்டை விடுறாருன்னு டைவர்ஸ் கேட்கிற மனைவிகளும், துணி துவைக்கலேன்னு டைவர்ஸ் பண்ணுற மனைவிகளும் வெளிநாட்டில்தான் என்றில்லை. உள் நாட்டிலேயே இருக்காங்க. இதோ நம்ம த்ரிஷா …!