“ ரன் ரன் உன்னை ஜெயித்திட ரன் ரன் “ உன் தோல்வி விலகிட ரன் ரன் “

அமோக வெற்றி பெற்ற “ செல்வந்தன் “ வெற்றிப்படத்தைத் தொடர்ந்து பத்ரகாளி பிலிம்ஸ் பிரசாத் தயாரிக்கும் படம் “ புருஸ்லீ – 2 தி பைட்டர் “ தெலுங்கில் ” புருஸ்லீ தி பைட்டர் “ என்ற பெயரில் தயாராகிக் கொண்டிருக்கும் படமே தமிழில் “புருஸ்லீ – 2 தி பைட்டர் “ என்ற பெயரில் உருவாகிறது. ராம்சரண் நாயகனாக நடிக்கிறார். நாயகியாக ரகுல் பிரீத்தி சிங் நடிக்கிறார். மற்றும் இந்த படத்தில் அருண்விஜய் வில்லனாக நடிக்கிறார். மற்றும் அமிதாஸ், நதியா, சம்பத், ஷாயாஜி ஷிண்டே கீர்த்தி கர்பந்தா, ராவ்ரமேஷ் ஆகியோரும் நடிக்கிறார்கள்.

இயக்கம் – சீனு வைட்லா.. இவர் இயக்கத்தில் வெளியான “ டி “ ரெடி “ வெங்கி, “ கிங் “ நமோ வெங்கடேஷ் “ தூக்குடு, பாட்ஷா, துபாய்சீனு, போன்ற படங்கள் அமோக வெற்றி பெற்றுள்ளது. இந்த படம் பற்றி வசனம் எழுதி தமிழாக்கம் செய்யும் A.R.K.ராஜராஜாவிடம் கேட்டோம்.. படு கர்ஷியல் படம் இது . சினிமாவில் பைட்டராக வரும் ராம் சரண் வாழ்கையில் நடக்கும் பிரச்சனைகள் குடும்பத்தில் நடக்கும் செண்டிமெண்ட் போன்றவைதான் இந்த படத்தின் திரைக்கதை. மகதீரா படத்திற்கு பிறகு சிரஞ்சீவி ராமசரண் படத்தில் நடித்திருப்பது இந்த படம் தான் கிளைமாக்ஸில் ஒரு அதிரடி சண்டை காட்சியில் அவர் நடித்திருக்கிறார். இந்த படத்தில் இடம்பெறும் “ ரன் ரன் உன்னை ஜெயித்திட ரன் ரன் “ உன் தோல்வி விலகிட ரன் ரன் “ என்ற பாடல் அனைவருக்கும் பிடித்த பாடலாக இருக்கும். இம்மாதம் 16 ஆம் தேதி ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கில் இப்படம் வெளியாக உள்ளது என்றார்.

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
‘கத்துக்குட்டி’ படத்தை கொண்டாடும் நடிகர் சிவகார்த்திகேயன்

https://www.youtube.com/watch?v=yDURhzgkTL8 https://www.youtube.com/watch?v=lmhCjvhyFqA https://www.youtube.com/watch?v=Qw5jF1fI_Lg https://www.youtube.com/watch?v=O5KoAoyjsGQ

Close