சேரனின் C2H திட்டம்… கிராமபுறங்களில் அமோக வரவேற்பு!

சேரனின் புதிய திட்டமான C2H எப்படியிருக்கும்? தேறுமா? தேறாதா? என்றெல்லாம் சைலண்ட்டாக ஒரு விவாதம் ஓடிக் கொண்டிருக்கிறது. ‘நம்ம பொழப்பை கொடுக்க ரூட் போடுறாரே இந்தாளு’ என்று தியேட்டர்காரர்கள் சினம் கொண்டு திரிவதையும் கேள்விப்படுகிறோம். இந்த நிலையில்தான் தமிழ்சினிமாவுக்கே புத்துணர்ச்சி கொடுக்கக் கூடிய இந்த திட்டத்தின் அடுத்த படியை தாண்டியிருக்கிறார் சேரன்.

லட்சக்கணக்குல டி.வி.டி போட்டு அது விக்கலேன்னா? திரும்பி வர்ற டி.வி.டி எல்லாம் நஷ்டம்தானே? அதற்கும் ஒரு புது திட்டம் வகுத்து அதை செயல்படுத்த துவங்கினார்களாம். எப்படி தெரியுமா? பொங்கலுக்கு சேரன் இயக்கிய ‘ஜெ.கே எனும் நண்பனின் வாழ்க்கை’ படத்தை வாங்குறவங்க பத்து ரூபாய் முன் பணம் கட்டுங்க. மீதி நாற்பது ரூபாயை டி.விடி. கைக்கு கிடைக்கும் போது கொடுங்க என்றார்களாம். சேலம் ஈரோடு தஞ்சாவூர் போன்ற பகுதிகளில் இந்த திட்டத்திற்கு பயங்கர வரவேற்பு. லட்சக்கணக்கான டிவிடிகள் முன்பே புக் செய்யப்பட்டுவிட்டனவாம்.

இந்த திட்டம் சிறப்பாக செயல்படும் என்பதற்கான முதல் பிள்ளையார் சுழியாக அமைந்துவிட்டது கிராமபுறங்களில் கிடைத்து வரும் இந்த வரவேற்பு. போகிற போக்கை பார்த்தால் பெரிய ஹீரோக்களின் படங்களும் ரிலீஸ் ஆன இரண்டு வாரங்களுக்கு பிறகு சேரனின் C2H நிறுவனத்தை வந்து சேரும் போலிருக்கிறது.

அட்றா மேளத்தை… கட்றா தாலிய…!

1 Comment
  1. Jessy says

    வரவேற்கிறோம் சேரன் சார். ஒரு டிக்கெட் நூற்றி இருபது ரூபாய், பாப்கார்ன் நூற்றி இருபது ரூபாய் ஒரு குளிர்பானம் அறுபது ரூபாய் என ஒரு குடும்பம் சினிமா பார்க்க சாதாரணமாக ஆயிரம் ரூபாய் செலவழிக்க வைக்கிறார்கள்.

    ஒரு நடுத்தர வர்க்கத்தின் சினிமா பார்க்கும் ஆசை என்பது தங்க முட்டை போடும் வாத்தை போன்றது. பேராசை பட்டு விலையை ஏற்றி அந்த வாத்தை அறுத்துக் கொண்டிருப்பவர்களுக்கு அதன் வலியும் புரியாது. வாத்து செத்து போனால் முட்டை கிடைக்காது என்பதுவும் புரியாது.

    ஆனால், வீட்டுக்கே DVD அதுவும் ஐம்பது ரூபாய்க்கு என்பது இந்த நடுத்தர குடும்பங்களுக்கு கிடைக்காது கிடைத்த வரப்பிரசாதம் போல. தியேட்டர் கிடைக்கவில்லை என்பது பற்றி எல்லாம் நீங்கள் யோசிக்க வேண்டாம். ஆங்கில படங்கள் எல்லாம் வசூல் ரீதியாக கிடைக்கும் வெற்றியை மட்டுமே வெற்றியாக கொண்டாடுகின்றன. வருமானம் இல்லாமல் தியேட்டர்களில் நூறு நாள் ஓடுவதும், இருநூறு நாள் ஓடுவதும் சொல்வதற்கு கவுரவமாக இருக்கலாமேயன்றி அதனால் யாருக்கும் எந்த பயனும் இல்லை.

    உங்கள் திட்டம் கண்டிப்பாக வெற்றி பெரும். நீங்க கலக்குங்க சார்.

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
Darling Movie Press Meet Photos

Close