ஒரு அற்பனும், சில ஆர்மோனியக் கட்டைகளும்! தமிழ்சினிமாவில் தலைவிரித்தாடும் சாதிக் கொடுமை?

சாதியை ஒழிக்க வேண்டிய அரசியல்வாதிகள், சாதி அரசியல் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். “எத்தனை பெரியார் வந்தாலும், உங்களை திருத்த முடியாதுடா” என்று ஒரு படத்தில் வசனம் பேசிய நடிகர் விவேக் கூட, தனக்கென்று ஒரு பிரச்சனை வரும்போது “நான் தனி ஆள் இல்லை. என் பின்னால் ஒரு பெரிய சமூகம் இருக்கிறது” என்று மிரட்டியதையெல்லாம் இந்த சினிமா சற்றே முகம் சுளித்தபடி கவனித்துக் கொண்டுதான் இருக்கிறது. சின்ன கவுண்டர்கள், தேவர் மகன்கள், துரைசிங்கம் அண்ணாச்சிகள் என்று வேறொரு பக்கம் வேறொரு, சாதி சினிமா சதிராடிக் கொண்டிருக்க, இன்னும் ஒரு படி மேலே போய் “அட அற்பனுங்களா?” என்றாக்கிக் கொண்டிருக்கிறார் ஒருவர்.

இந்த செய்தியை படித்து முடிக்கையில் உங்கள் சந்தோஷம் வடிந்திருந்தால், அதற்கு அவர்தான் பொறுப்பு.

மிக சமீபத்தில் அறிமுகமாகி மிக மிக வேகமான முன்னேறிக் கொண்டிருக்கும் இசையமைப்பாளர் அவர். அவரே நினைத்துப் பார்க்க முடியாத உயரம் இப்போது. அவ்வளவு பெரிய நடிகரின் படத்திற்கு இசையமைக்க வேண்டும் என்றால், இன்னும் ஆறேழு வருஷங்கள் இருபது விரல்களும் தேயத் தேய ஆர்மோனிய பெட்டியை தடவினாலும் கிடைக்காத பெரும் பேறு அது. அவ்வளவு எளிதில் வந்தது அவருக்கு. அதற்கு காரணம் இவரை அறிமுகப்படுத்திய அந்த இயக்குனர்தான். சாதியில் கீழானவர் என்று அவரை இவரே நினைப்பதுதான் வெட்கக் கேடு. (அறிவில் பெரியவராக இருந்ததால்தானய்யா உனக்கு இவ்வளவு பெரிய இடத்தை அவரால் உருவாக்கித்தர முடிந்தது?)

நல்ல மெலடிகளையும் அற்புதமான கானா பாடல்களையும் மெட்டமைத்து, அதே வேகத்தில் அவற்றையெல்லாம் ஹிட்டமைத்துத் தரும் அந்த இசையமைப்பாளர், அந்த கானா பாடகரும், அந்த இயக்குனரும் தன் ரெக்கார்ட்டிங் ஸ்டூடியோவுக்கோ, வீட்டிற்கோ வந்துவிட்டு போன பின் ஒரு வேலை செய்கிறாராம். அதுதான் தீட்டு கழிப்பது! சில காலமாகவே நடந்து வரும் அந்த ஈன செயலை அந்த டைரக்டரும் அறியவில்லை. அந்த கானா பாடகரும் அறிந்திருக்கவில்லை.

குரு துரோகத்தை விட மோசமான இந்த துரோகத்தை நினைக்கும்போதே கபாலம் கலங்குதுல்ல?

4 Comments
  1. Anantharaman says

    Andhanan idhu unmaiyaaa? padikkavey kumattudhu?

    1. vijay says

      Anthanan appappo kapsa viduvaaru… ex: Nayantha will never act with Vikram.. this is one among them

  2. Annamalai Badsha says

    santhosh subramaniam???

  3. alam says

    Santhosh narayanan paarkka appadi theriyalaye romba elimayyaga thaan irukkaru

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
Actor Karthi launched Metro movie Bhoomi

Close