இசைப்பிரியா பற்றிய படத்திற்கு சென்சார் தடை! நட்பு நாடுக்கு எதிராக படம் எடுப்பதா? சென்சார் கண்டனம்!

‘கருத்து சுதந்திரம் கருத்து சுதந்திரம்னு ஒண்ணு இருக்கு, ஆனால் அது ஏட்டளவில் பேச்சளவில்தான் இருக்கா? செயலளவில் இல்லையா?’ என்றெல்லாம் குமுறிக் கொண்டிருக்கிறார் ஒரு இயக்குனர். அதற்கு காரணம் அவர் இயக்கிய உயிர்ப்பான படம் ஒன்றுக்கு, தடிப்பான தாழ்ப்பாள் போட்டுவிட்டது சென்சார். ‘படத்தை ரிலீஸ் பண்ணனும்னா பாம்பேக்கு போய் அங்கிருக்கும் தணிக்கை வாரியத்தை அணுகு’ என்கிறார்களாம்.

‘போர்க்களத்தில் ஒரு பூ’ என்ற தலைப்பில், ஈழ விடுதலைக்காக போராடிய இளம் பெண் இசைப்பிரியாவின் கதையை படமாக்குகிறார் கு.கணேசன். இவர் பெங்களூரில் வசிக்கும் தமிழர். இந்த படம் முழுக்க முழுக்க, இலங்கையில் நடந்த முள்ளிவாய்க்கால் போர்க் காட்சிகளையும், மரண ஓலத்தையும் சாட்சியாக கொண்டு பதிவு செய்யப்பட்டது. இளையராஜா இசையமைத்தால் மட்டுமே இதில் ஜீவன் இருக்கும் என்பதால் அவரையே இசையமைப்பாளராகவும் ஆக்கியிருந்தார். நடுவில் எவ்வளவோ சோதனைகளை அவர் கடந்துதான் இந்த படத்தை முடித்தார் என்று கூறப்படுகிறது.

இவர் ஒருமுறை லண்டன் சென்றிருந்தபோது, கருணா ஆட்களால் கடத்தப்பட்டார் என்றும் தகவல்கள் பரவின. எப்படியோ போராடி இந்த படத்தை முடித்து சென்சார் அனுமதிக்காக திரையிட்டிருந்தார். அங்குதான் இவருக்கு அப்படியொரு பதில் தரப்பட்டதாம். ‘நட்பு நாட்டுக்கு எதிரா நீங்க படம் எடுத்திருக்கீங்க, அதனால் உங்க படத்திற்கு அனுமதி இல்லை’ என்று மறுத்துவிட்டார்களாம்.

மறு தணிக்கைக்கு விண்ணப்பம் செய்திருக்கிறார். என்ன நடக்குமோ?

Read previous post:
அண்ணே எப்ப போவாரு? திண்ணை எப்ப காலியாவும்? சதீஷ், கருணாகரன் காட்டில் தூரல்!

இனிமேல் ஹீரோதான் என்ற முடிவுக்கு வந்துவிட்டார் சந்தானம். வடிவேலு ஓய்ஞ்ச நேரத்தில் உள்ளே வந்த சந்தானம், தனது வாக்கு மற்றும் நாக்கு வன்மையால் ஸ்டிராங்கான இடத்தை பிடித்துவிட்டார்....

Close