இந்த படத்துக்கு ஏ கொடுத்தே தீரணும்! ஏமாந்த சென்சார் ஆபிசர்ஸ்…

இந்த படத்துக்கு ‘A’ கொடுத்தே தீர்றது என்று கங்கணம் கட்டிக் கொண்டு கிளம்பிய சென்சார் ஆபிசர்களையே, ‘ஐ யம் ஸாரி சார்…’ சொல்ல வைத்த படம் ‘குரங்கு கையில பூ மாலை! ’ ‘அட… இதென்னங்க ஆச்சர்யம்’ என்று திகைப்பவர்கள் மேலே தொடரவும்.

‘விகடகவி’ என்ற படத்தை இயக்கிய கிருஷ்ணனின் இரண்டாவது படம் குரங்கு கையில் பூமாலை. இவர் ஏற்கனவே ஒரு பூமாலையை தன் படத்தில் அறிமுகப்படுத்தியவர். அமலாபால்தான் அந்த பூமாலை. இந்த படத்தில் ‘கோலி சோடா’ ஹீரோயின் சாந்தினி நடித்திருக்கிறார். குரங்கு யாரு?, பூமாலை யாரு? என்று இந்நேரம் விளங்கியிருக்குமே? நான்கு இளைஞர்களிடம் சிக்கிய சாந்தினி அந்த நால்வரையும் எப்படி டீல் பண்ணினாள் என்பதுதான் கதை.

வசனங்களும் காட்சியமைப்புகளும் படம் துவங்கிய சிறிது நேரத்திலேயே அதிர்ச்சியை கொடுத்ததாம் சென்சார் உறுப்பினர்களுக்கு. உடனே நோட் பேனா சகிதம் உட்கார்ந்து கட் சீன்களை குறிக்க ஆரம்பித்திருக்கிறார்கள். இன்டர்வெல் சமயத்தில் பேனாவை மூடி வைத்த அதே ஆபிசர்ஸ், இந்த படத்துக்கு ஏ கொடுப்பது தப்பு. பேசாம யு/ஏ கொடுத்துரலாம் என்று முணுமுணுத்துக் கொண்டே செகன்ட் ஹாஃபுக்கு தயாரானார்கள். க்ளைமாக்ஸ் முடிந்ததும் அப்படியே அதிர்ச்சியான அத்தனை பேரும், சார்… நாங்கதான் இந்த படத்தை தப்பா புரிஞ்சுகிட்டோம். க்ளீன் யு கொடுக்குறோம். சமுதாயத்துக்கு தேவையான நேரத்துல தேவையான அளவில் கொடுக்கப்பட்ட பிரமாதமான அட்வைஸ் இது என்று பாராட்டினார்களாம்.

எப்படி அமலா பாலை பார்த்ததும் இந்த பொண்ணு நல்லா வரும்னு மனசு சொல்லுச்சோ, அப்படிதான் கோலிசோடா சாந்தினியை பார்த்ததும் தோணுச்சு. வரும்போதே வெற்றிப்பட ஹீரோயின் என்ற அந்தஸ்தோடதான் வந்தார். அந்த படத்தை விட பல மடங்கு இந்த படத்தில் அவருக்கு பேர் கிடைக்கும் என்றார் கிருஷ்ணன். இவர் ஏராளமான படங்களுக்கு சவுண்ட் என்ஜினியராகவும் இருந்ததால் இவருக்கு சினிமாவின் பல்ஸ் அத்துப்படி!

அதெப்படி? என்பவர்கள் இன்னும் சில வாரங்கள் காத்திருந்தால் படம் பார்த்தே புரிந்து கொள்ளலாம்.

Read previous post:
கர்பிணியா இருந்தாலும் தியேட்டருக்கு வாங்க…. எங்க பேய் நல்ல பேய்தான்! அச்சம் போக்கும் ஆவிகுமார்!

‘திருநெல்வேலி’ தொடங்கி சுமார் பதினைந்து படங்களில் ஹீரோவாக நடித்திருக்கிறார் உதயா. அப்பா, தம்பி, தம்பியின் மனைவி, தங்கை மகன் என்று குடும்பமே சினிமா என்ற நிழலில் அடைக்கலமாகியிருந்தாலும்,...

Close