இசை சூறாவளியை தந்திரமாக ஏமாற்றிய இயக்குனர்! மூணு கோடி ஏவ்வ்வ்வ்…. மனசு இன்னும் ஆறலையாமே?

‘இரும்பை முழுங்கிட்டு இஞ்சி ரசம் குடிச்சிக்கலாம்னு நினைச்சு தப்பு பண்ணுற ஊர்டா இது’ என்று இந்த செய்தியை படித்து முடிக்கும் போது நீங்கள் அலுத்துக் கொண்டாலும் தப்பில்லை. ஏனென்றால் இப்படியெல்லாம் ஒரு காரியத்தை ஸ்கிரீன் ப்ளே எழுதி செய்தாலும் நடத்தியிருக்க முடியாது. ஆனால் தந்திரமாக நடத்தி மூணு கோடியை அபேஸ் செய்துவிட்டார் அந்த இயக்குனர்.

தமிழ்சினிமாவின் பெருமை அந்த இசையமைப்பாளர். அடக்கம். அன்பு. ஐந்து வேளையும் தொழுகை செய்யும் பக்தி. உலகமே தன்னை திரும்பி பார்த்தாலும், துளியும் தலைகனமில்லாமல் ‘எல்லா புகழும் என்னுடையதல்ல’ என்று சொல்லிவிட்டு அடுத்த ட்யூன் போட கிளம்பிவிடும் அற்புதம் என்று எல்லார்க்கும் பிடித்தவர் அவர். அவரைதான் ஈவு இறக்கமில்லாமல் ஏமாற்றியிருக்கிறார் அந்த இயக்குனர். இந்த இயக்குனரும் அந்த இசை சூறாவளியும் பல வருஷ நண்பர்கள். அவ்வளவு ஏன்? சற்றே ஷை டைப்பான அவரை ஸ்கிரீனில் தோன்றி நடிக்க வைக்கிற அளவுக்கு அவருக்கு தைரியம் கொடுத்தவரே இந்த இயக்குனர்தான். இவ்வளவு நெருக்கமாக இருந்த இருவரும் தற்போது பேசிக் கொள்வதில்லை. ஏன்?

ஒருநாள் இசை சூறாவளியை சந்திக்க வந்திருந்தாராம் அந்த இயக்குனர். முகத்தில் அப்பிக்கிடந்தது கவலை. அப்படியொரு நாளும் இவரை பார்த்ததில்லை இசை சூறாவளி. ‘ஏன்ப்பா… என்னாச்சு உனக்கு?’ என்று கேஷவலாக கேட்க, இயக்குனர் ஒரு ரிப்போர்ட்டை எடுத்து டேபிளில் போட்டார். அவருடைய மருத்துவ குறிப்புதான் அது. படித்துப்பார்த்தால்… ஐயகோ. இசை சூறாவளிக்கு தலையே சுற்றியது. இயக்குன நண்பருக்கு கேன்சர். ‘இதிலிருந்து நான் விடுபட்டுற முடியும். ஆனால் மருத்துவம் செய்ய அமெரிக்கா போகணும். மூணு கோடி செலவாகும்’ என்று இவர் சொல்ல, ‘அட… நான் இருக்கேன். அந்த மூணு கோடியை நான் தர மாட்டேனா? கவலையை விடு. சிகிச்சையை ஆரம்பி… ’ என்று கூறிய சூறாவளி, அன்றே தனது பணத்தை தயார் செய்து இயக்குனருக்கு கொடுத்துவிட்டார்.

நாட்கள் ஓடின. அமெரிக்கா வரைக்கும் கூட செல்வாக்கு படைத்தவராச்சே இசை சூறாவளி? நண்பரின் உடல் நலத்தை விசாரிக்க தனது சோர்ஸ் மூலம் முயன்றவருக்கு எப்படியோ கடைசியில்தான் தெரிந்தது. அந்த மருத்துவ குறிப்புகள் கூட திட்டமிட்டு தயாரிக்கப்பட்ட போலி என்று! நொறுங்கிப் போய்விட்டார். இந்த விஷயம் எதுவும் தெரியாது என்று நினைத்துக் கொண்டு சில மாதங்களுக்கு பிறகு மீண்டும் இவரை சந்திக்க வந்தாராம் அந்த இயக்குனர்.

ஒரே ஒரு வார்த்தையில் அவருக்கு எல்லாவற்றையும் புரிய வைத்தாராம் இசைச் சூறாவளி. ‘கேன்சர்லயிருந்து நீங்க பொழச்சுட்டீங்க, ஆனால் நான் செத்துட்டேன்!’

இயக்குனருக்கும் புரிந்துவிட்டது. இனிமேல் பேசி பிரயோஜனம் இல்லை. எதுவும் பேசாமல் அங்கிருந்து கிளம்பிவிட்டார். இப்போது இருவருமே பேசிக் கொள்வதில்லை. வந்தே மாதரம் பாடிக் கொண்டிருந்த ஒரு நட்பு ஜனகனமனவாகிவிட்டது.

சே…. என்னங்கடா ஒலகம் இது?

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
Amitabh Bachchan unveils Worldoo.com, first online ecosystem for children!!!

Mr. Amitabh Bachchan unveiled the new look of worldoo.com, India’s first co-created online ecosystem for kids between 6-12 years of...

Close