புதுக் கமிட்மென்ட்? தெறிக்கவிடும் சசிகுமார்! அலறும் படக்கம்பெனிகள்…

தத்தளித்துக் கொண்டிருக்கிறது தமிழ்சினிமா. ஆனால் அந்த நிஜம் புரிவதேயில்லை பாதி பேருக்கு. படம் ரிலீசான முதல் ஷோவே, இந்த படத்தின் கலெக்ஷனை கேட்டு ரிசர்வ் பேங்க் கவர்னர் திகிலாகிட்டாரு தெரியுமா? என்று பீதியை கிளப்பிவிடுகிற கூட்டம் ஒன்று கிளம்பிவிட்டது. முதல் ஷோ வசூலே முப்பது கோடி. நாலாவது ஷோ வசூல் நானூறு கோடி என்று அடித்துவிட்டுக் கொண்டிருக்கிறார்கள். அது அவர்களின் ஆசை. ஆனால் எல்லாவற்றையும் நம்பி கைதட்டுகிற அந்த ரசிகர்களைவிட கொடூரமாக இருக்கிறது ஹீரோக்களின் மனசு.

இதெல்லாம் சாத்தியமா? அப்படியொரு கலெக்ஷன் வந்தால், இந்திய சினிமாவுலகத்தில் கோடம்பாக்கம் மட்டும் பொன் கொழிக்கும் பூமியாக இருக்குமே என்கிற அனலைஸ் பார்வை எதுவும் இல்லாமல் அன்றிரவே பார்ட்டிகளில் திளைக்கிற அளவுக்கு அறியாமையில் சிக்கிக் கொண்டிருக்கிறார்கள் ஹீரோக்கள்.

இந்த நேரத்தில்தான் அந்த கிறுகிறுக்க வைக்கும் தகவல். தாரை தப்பட்டை ஹீரோ சசிகுமார் ஏழுகோடி சம்பளம் கேட்கிறாராம். அதுவும் “பெரிய கம்பெனிகளுக்கு கால்ஷீட் இல்லை. புதுசாக பண மூட்டையோடு யாராவது வந்து இறங்குனா சொல்லுங்க. அவர்களுக்குதான் என்னோட கால்ஷீட்” என்கிறாராம். அதையும் அவர் நேரடியாக சொல்வதில்லை. தனக்கென்று சில தரகர்களை வைத்திருக்கிறார் அவர். அவர்களின் வாயால் வெளிப்படும் வெடிகுண்டுதான் இவையெல்லாம்.

இதில் பெரிய உளவியல் பார்வை ஒன்றும் இருக்கிறது. பெரிய பெரிய கம்பெனிகள் என்றால் அவர்களுக்கு வியாபாரம் நன்றாக தெரியும். “திருச்சி பஸ்ஸ்டாண்டுக்கு பக்கத்திலிருக்கும் தியேட்டரில் ஜி- ரோவில் 8 வது சீட்டில் ஒரு மூட்டைப்பூச்சி வாழ்ந்து வந்ததே, அது சவுக்கியமா?, கோவை தியேட்டர் வாசல்ல ஒரு ரோஜாப்பூ செடி இருந்திச்சே, இன்னைக்கு எத்தனை பூ பூத்துச்சு?” என்கிற வரைக்கும் எல்லாவற்றையும் துல்லியமாக தெரிந்து வைத்திருப்பார்கள். அவர்களிடம் ஏழு கோடி கேட்டால், “தம்பி இந்தா எலுமிச்சம் பழம். நல்லா தேய்ச்சு குளிச்சுட்டு கிளம்பு” என்றால் என்னாவது?

அதனால்தான் புதுக் கம்பெனிக்கு மட்டும் கால்ஷீட் என்கிறாராம் சசி.

இவர்களை போன்ற ஹீரோக்களையெல்லாம் செங்கல்பட்டு தாண்டி ஒவ்வொரு தியேட்டராக அழைத்துச் சென்றால்தான் சினிமா பிழைக்கும்! அதுவரை அவர்களை மாயையிலேயே வைத்திருக்கும் இடைத்தரகர்கள்தான் பிழைப்பார்கள்!

1 Comment
  1. Rafeek says

    இந்த பித்தம் ரஜினி, கமல், அஜித், விஜய் முதல் முந்தாநாள் வந்த ஜெய் வரைக்கும் உண்டு!

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
அஜீத் படத்திற்கு இடையூறு செய்தாரா பேரரசு?

சற்றே லேட்! ஆனால் செய்தியை கேட்டதிலிருந்தே கிறுகிறுத்துப் போயிருக்கிறது அஜீத் வட்டாரம்! “அவரா இப்படி பண்ணினார்? அவருக்கு நம்ம தல அவ்ளோ பண்ணினாரே? அவர் நடித்த படத்திற்கு...

Close