சினிமாவுக்குள் கட்சிப்பணம்? கண் ஜாடை காட்டும் பெரிய ஹீரோ!
கோடம்பாக்கத்தில் சாமியார்கள் பணம் நிறைய உலவுவதாக வெகு காலமாகவே ஒரு பேச்சிருக்கிறது. அதற்கேற்றார் போல, ஒரு காலத்தில் கோடி கோடியாக கொட்டி படமெடுத்த தயாரிப்பாளர் ஒருவர், அதே சாமியார் ஊரறிய கைது செய்யப்பட்ட பின் ‘காஞ்சி’ போய் கிடந்தது ஊருக்கே தெரியும். நித்திய சிரிப்பும் பூரண குதுகலமுமாக இருக்கும் இன்னொரு சாமியாரின் பணமும் அவரது கைதுக்கு பின் கோடம்பாக்கத்தில் குறைந்து போனது. இந்த நிலையில்தான் தமிழ்சினிமாவின் பெரிய தயாரிப்பாளராக இருந்து பின்பு தடுமாறி எழுந்திருக்கும் இன்னொருவர் பற்றியும் பேசப்படுகிறது. என்னவாம்?
இவர் காவிக்கட்சிக்கு ரொம்ப ரொம்ப வேண்டியவராம். ஆபிஸ் வாசலிலேயே சாய்பாபாவின் கோவிலையும் கட்டியிருக்கிறார். இந்த கோவில் கட்டியதிலிருந்தே அவரது சுக்கிர திசை சூடு பிடிக்க ஆரம்பித்துவிட்டது. சும்மாயிருந்தவரை கூப்பிட்டு படம் கொடுத்தார் தலையாய நடிகர். அதற்கப்புறம் அவரையே வைத்து மற்றொரு படத்தையும் தயாரித்து வருகிறார். இவரது சப்போர்ட்டுக்கு வடக்கிலிருக்கும் சில தலைவர்கள் ஹெல்ப் பண்ணி வருகிறார்களாம்.
நல்ல விஷயம்தான். இப்போது அதே கட்சி ஆட்சிக்கு வந்துவிட்டதால், முகம் கொள்ளாத சிரிப்போடு நடமாட ஆரம்பித்திருக்கிறார் அவர். துட்டுக்கு பிரச்சனையில்லை என்பது மட்டும் காரணமில்லை. முன்பு இவரது தயாரிப்பில் நடிப்பதாக சொல்லி சொல்லி ஏமாற்றிய அந்த மூன்றெழுத்து முக்கிய நடிகர், சமீபத்தில் இவரை தொடர்பு கொண்டாராம். ‘கால்ஷீட் தர்ற எண்ணம் இருக்கு. எப்ப வேணா நேர்ல வரலாம்’ என்பதுதான் அந்த போன் தகவல்.
எல்லாம் மத்தியில இருந்து வர்ற அசரீரி….