எல்லாம் சரியா வரும்ணே! -காபி வித் காதலுடன் கெக்கேபிக்கே சிரிப்பு

வாட்டியெடுக்கும் ஊட்டிக்குளிர் தமிழ் சினிமா சென்ட்டிமென்ட்டுகளில் ஒன்று. பாலுமகேந்திராவுக்கெல்லாம் பேவரைட் பிளேஸ் ஒன்று உண்டென்றால் அது ஊட்டிதான். விஷுவல் பியூட்டிக்காகவும், வேலை நேர டென்ஷனை குறைக்கவும் ஊட்டியை தேர்ந்தெடுக்கும் சினிமா இயக்குனர்கள் குறைவென்றாலும் அதுவே சினிமாவுக்கு நிறைவு.

‘உள்ளத்தை அள்ளித்தா’ படத்தை ஊட்டியில் எடுத்த சுந்தர்சி, பல வருடங்களுக்கு பின் ‘காபி வித் காதல்’ படத்தை ஊட்டியில் எடுத்துக் கொண்டிருக்கிறார். அந்தப்படமே ஆஹா ஓஹோ ஹிட்டாச்சே? அப்ப இந்தப்படம்? இப்படி சென்ட்டிமென்ட்டால் துளைத்தாலும், படம் ஃபுல் காமடி பிளேவர் என்பதால் இப்பவே வெண்திரையில் ஒரு வெள்ளிச்சிரிப்பு என்ற எதிர்பார்ப்பில் காத்திருக்கிறார்கள் ரசிகர்கள்.

ஸ்ரீகாந்த், ஜெய், ஜீவா என்று முக்கோண ஹீரோக்களுடன் ஊட்டியை அடைந்திருக்கும் சுந்தர்சி, அவர்களுக்கு தலா ஒரு ஹீரோயின் என்கிற கணக்கையும் தவற விட்டாரில்லை.

த்ரில்லரா, முழுக்க முழுக்க லவ்வா என்பதையெல்லாம் விடுங்கள். யோகிபாபுவையும், கிங்ஸ்லியையும் ஒரு முடிவோடு உள்ளே இறக்கியிருக்கிறாராம் சுந்தர். கவுண்டமணி, செந்தில் சகாப்தம் முடிஞ்சுருச்சுன்னுதானே நினைக்கிறீங்க. இந்தா மறுபடியும் ரிப்பீட்டு… என அவர்களை அதே பிளேவரில் கொண்டுவரப் போகிறாராம்.

‘நீ அதுக்கெல்லாம் சரிபட மாட்டே’ என்று யோகிபாபுவை பார்த்து ஊர் விமர்சித்தாலும் சுந்தர்சியின் முந்தைய பட சிரிப்புகள் அந்த நம்பிக்கையை உடைத்துக் கொண்டிருப்பதால்…

காபி வித் நானு… என்று காத்திருக்கிறார் திருவாளர் பொதுஜனம்.

எப்ப சாமீய் வர்றீங்க?

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
சேத்துமான் –விமர்சனம்

‘பன்னி’ துணிக கருமம். உணவு அரசியலை வைத்து பிழைத்துக் கொண்டிருக்கும் நாட்டில், போகிற போக்கில் செருப்படி என்பது இதுதான் போலிருக்கிறது. மாட்டுக்கறிக்கா ஆசைப்பட்டீங்க? என்று பட்டியலின குடியிருப்பை...

Close