சினிமா ஹீரோவான கம்யூனிஸ்ட் தலைவரின் மகன்! சீமானுக்கும் முக்கிய ரோல்!
தமிழர் நலம் கலை பண்பாட்டு இயக்கம் என்ற பட நிறுவனம் தயாரிக்கும் படத்திற்கு “ முந்திரிக்காடு “ என்று பெயரிட்டுள்ளனர். இந்த படத்தில் இயக்குனர் சீமான் போலீஸ் அதிகாரியாக கதையின் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். நாயகனாக புகழ் என்பவர் அறிமுகமாகிறார். இவர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரான C.மகேந்திரனின் மகன். கதாநாயகியாக சுபபிரியா நடிக்கிறார். மற்றும் ஜெயராவ், சோமு, சக்திவேல், ஆம்பல்திரு, கலைசேகரன் , பாவாலட்சுமணன் ஆகியோரும் நடிக்கிறார்கள்.
கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் – மு.களஞ்சியம்.
படம் பற்றி இயக்குனரிடம் கேட்டோம்… முந்திரிக்காட்டு மக்களின் வாழ்கை யதார்த்தத்தை இதில் பிரதிபலித்திருக்கிறோம். விலையுயர்ந்த பொருளாக மாறிப்போன முந்திரியின் விளை நிலங்களில் சிந்தும் ஏழ்மையின் வியர்வை துளி எப்படிப்பட்டது என்பதும். அங்கே காதல் வயப்பட்ட இருவரின் காதலுக்கு ஊரே எதிர்ப்பு தெரிவிக்க, காக்கி சட்டைக்கே உரிய கௌரவத்தை காப்பாற்றும் அன்பரசன் அந்த காதலர்களை சேத்து வைக்க எடுத்த முயற்சி வெற்றி பெற்றதா இல்லையா என்பது தான் கதை.
படப்பிடிப்பு தஞ்சை மாவட்டம், நெல்லை மாவட்டம் மற்றும் ஆந்திராவின் நகரி மற்றும் சென்னை போன்ற இடங்களிள் 40 நாட்கள் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது. மற்றும் கடலூர், பாண்டி உட்பட பல இடங்களிலும் படப்பிடிப்பு நடைபெறுகிறது.