அந்த வேலையெல்லாம் எங்கிட்ட வேணாம்… இனியாவை குதறிய தொகுப்பாளினி!
காமெடி டைம் அர்ச்சனா என்றால் கடா முடா ஆசாமிகள் கூட வாயெல்லாம் பல்லாவார்கள். அப்படியொரு ஒய்யார சிரிப்பு அவருக்கு. நிகழ்ச்சியின் பெயருக்கேற்ப எந்நேரமும் சிரித்த முகத்துடன் காட்சியளிக்கும் அவர், நடுவில் கல்யாணம் செய்து கொண்டு தொகுப்பாளர் தொழிலுக்கே குட் பை சொல்லியிருந்தார்.
ஆடுன கால் என்னைக்கு சும்மாயிருந்துருக்கு? கல்யாணம் செய்து கொண்டு அமெரிக்காவில் ஒதுங்கியவர், அமெரிக்கா அலுத்துப்போய் சென்னையில் மீண்டும் ஒதுங்கிவிட்டார். காமெடி டைம் ரிட்டர்ன் ஆன நேரம் நல்ல நேரம்தான் போலிருக்கிறது. முக்கிய பட விழாக்களுக்கு அவர்தான் காம்பியர். அவரது திருமுகத்தை கண்ட பழம் பெரும் இயக்குனர்கள், நம்ம படத்துல நடிக்கிறீங்களா என்று கேட்டு சினிமா வாய்ப்பையும் வாரி வழங்கி வருகிறார்கள். அப்படிதான் இனியா கதாநாயகியாக நடிக்கும் ஒரு படத்தில் இவரும் நடிக்கிறார். இனியாவுக்கு கதைப்படி இவர்தான் அக்கா.
எல்லா விளக்குகளையும் நிறுத்திவிட்டு ஷுட்டிங் செய்தாலும் வெளிச்சமாக இருக்கிறாராம் அர்ச்சனா. ஏனென்றால் அவர் கலர் அப்படி! பக்கத்திலிருக்கும் இனியா இந்த ஒரு காரணத்தினாலேயே மங்கிப் போய்விடுவதால், செம எரிச்சலுக்குள்ளாகிறாராம். ஒருநாள் வாய்விட்டே கேட்டுவிட்டார்.
இந்த படத்தின் ஹீரோயின் நான்தான். உங்க பக்கத்துல நிக்கும்போது என்னைவிட நீங்க கலரா இருந்தா அது நல்லாவா இருக்கு? அதனால் நீங்க நாளையில் இருந்து டல் மேக்கப் போட்டுட்டு வாங்க என்றாராம். அதை நீ சொல்லக் கூடாது. டைரக்டர் சொல்லட்டும். என்னைவிட நீ அழகா இருக்கணும், கலரா இருக்கணும்னா இருக்கவே இருக்கு, கலர். எடுத்து பூசிக்க வேண்டியதுதானே என்று இவர் எகிற, ஷுட்டிங் ஸ்பாட்டில் ஒரே கசமுசா சப்தம்.
அப்புறம் நாலு பெரிய மனுஷங்க உள்ளே பூந்து, சண்டையை தீர்த்து வைத்தார்களாம். எப்படியோ, அரை மனசோடு நடித்துக் கொண்டிருக்கிறார் இனியா.
நாட்ல எப்ப எதனால் கலவரம் விளையும்னே தெரியலையே?