“ எலி புழுக்கை கூட தேறல… ” கமிஷனர் அலுவலகத்தில் வடிவேலு மீது ‘சீட்டிங் ’ புகார்!

வடிவேலுவின் முன் கதை சுருக்கம் ரொம்ப போர் அடிக்கும் என்பதால் நேரடியாக விஷயத்திற்கு வந்துவிடுவோம். இன்று சென்னை நகர காவல் ஆணையரை சந்தித்து ஒரு கடுமையான புகாரை கொடுத்திருக்கிறார் எலி படத்தின் தயாரிப்பாளர் சதீஷ்குமார். அதில் எலிவேலு தன்னை பல கோடி ஏமாற்றிவிட்டதாக அழுது புலம்பியிருக்கிறார். அவர் மீது நடவடிக்கை எடுத்து தனது பணத்தை மீட்டுத்தரவும் கோரிக்கை வைத்திருக்கிறார்.

நிஜத்தில் நடந்தது என்ன?

மதுரை பகுதியில் தானுண்டு, தன் ரியல் எஸ்டேட் பிசினஸ் உண்டு என்று இருந்தவரை இழுத்து வந்து சினிமா தயாரிக்க வைத்தார் எலிவேலு. அப்போது அவர் தனது படம் எவ்வளவு பிசினஸ் ஆகும் என்பதை ஒரு குறிப்பாக எழுதியே கொடுத்தாராம். ஒரு ஸ்பூன் சர்க்கரையை விதைச்சுட்டு, ஒரு மூட்டை சர்க்கரையை வாரிக்கொள்ளும் புது பிசினஸ்சா இருக்கே? என்று மனம் மகிழ்ந்த சதீஷ்குமார் சுமார் பனிரெண்டு கோடி செலவில் இந்த படத்தை தயாரித்தார். ஆங்கில வரிசையின் கடைசி எழுத்தை கொண்ட சேனல் ஒன்று படத்தை பத்து கோடி வரை விலை பேசியது. சதீஷ்குமாரும் கொடுக்க தயாராகிவிட்டார்.

கொதித்தெழுந்த வடிவேலு, “என்னைய மட்டுமே நம்பி ஆதித்யா சேனல்னு ஒண்ணு நடத்திகிட்டு வர்றாங்க. நான் சொன்னா படத்தை 15 கோடிக்கே வாங்கிப்பாங்க. அந்தளவுக்கு அவங்களுக்கு என் மேல ஒரு நன்றிக்கடன் இருக்கு. அங்க இங்கன்னு அலைஞ்சு ஏன் அவஸ்தை படணும்?” என்று படம் வாங்க வந்த சேனலையும் விரட்டிவிட்டுவிட்டார். அதற்கப்புறம் சன் குழுமத்தை இவர்கள் நாட, அங்கு இவரது படத்தை பிட்டு பட ரேஞ்சுக்குதான் டீல் செய்தார்களாம் அவர்கள். அதற்குள் படம் வெளியாகி முதல் நாளே முதல் ஷோவே “அடச்சே…” என்றாக்கிவிட்டது ரசிகர்களை.

பத்து கோடி வரைக்கும் கேட்ட சேனல், அதற்கப்புறம் பத்து லட்சத்திற்கு கூட சீண்டவில்லை எலியை. இத்தனைக்கும் படம் வெளியாகிற நாளுக்கு முன்பாகவே தன் சம்பளம் எட்டு கோடியை பைசா துட்டு பாக்கியில்லாமல் வசூலித்துவிட்டாராம் வடிவேலு. இந்த படத்தை ரிலீசே செய்ய வேண்டாம் என்ற முடிவுக்கு அப்போது தயாரிப்பாளர் வர, “நீங்க படத்தை ரீலீஸ் பண்ணலேன்னா நான் தூக்கு மாட்டி தொங்கறதை தவிர வேற வழியேயில்லை” என்றும் மிரட்டினாராம் வடிவேலு. இதையெல்லாம் இப்போது சொல்லி சொல்லி புலம்பும் சதீஷ்குமார், “அன்னைக்கே படத்தை தூக்கி குப்பையிலே போட்டிருந்தா, வடிவேலுவுக்கு கொடுத்த எட்டு கோடியாவது மிச்சமாகியிருக்கும். நானும் ஓரளவு நஷ்டத்தோட ஊருக்கு போயிருப்பேன்” என்றும் புலம்பி வருகிறாராம்.

யானை மாதிரி பலமாக இருந்த நிலத்தை விற்று எலியை வாங்கிய தயாரிப்பாளருக்கு, அதன் புழுக்கை கூட உருப்படியாக கிடைக்கவில்லையே? அதுதான்யா சினிமா!

2 Comments
  1. writer suprajaaa says

    பதினைந்து கோடி கிடைக்கும் என்று எதிர்பார்த்தது பேராசைதானே.சொந்த புத்தி இல்லாமல் நடிகரை குறை சொல்வது என்ன வித டிசைன்.

  2. writer suprajaaa says

    muthalileye intha commissioner VASAM THANTHA pugarodu pottu irukkalaame.

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
இன்னும் திரிஷாவும் நயன்தாராவும் பார்க்கல! ஜி.வி.பிரகாஷ் படத்தால் 10 கோடி ஜம்ப்

ஊரே ஒன்று சேர்ந்து கழுவி ஊற்றுவதற்கு ஒரு படம் ரெடியான பின்பும், ஜிவிபிரகாஷ் தப்பித்து வெள்ளையும் சொள்ளையுமாய் வெளியுலகத்தில் நடமாடுகிறார் என்றால், அந்த படத்தின் கலெக்ஷன் எவ்வளவாக...

Close