குட் புக்குல எதுக்கு கோடு கிழிக்கிறீங்க விஜய் சேதுபதி?
அட… விஜய் சேதுபதி நல்லவரு, வல்லவருன்னு எழுதி இங்க் காயல. அதுக்குள்ளே இப்படியொரு செய்தியா? என்ன பண்ணுறது? சினிமாவுலதான் கொடை ராட்டினம் குப்புறவும் தள்ளும். வானத்தையும் இடிக்க வைக்கும். இப்போது வந்திருக்கிற சோதனை… விஜய் சேதுபதிக்கு நிஜமாகவே வேதனை! அவர் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் கொடுக்கப்பட்டிருக்கிறது.
சினிமாவில் நடிக்க வந்த புதிதில் தன்னுடன் இருந்த நண்பர்களுக்கெல்லாம் நல்வாழ்வு தர வேண்டும் என்று நினைத்த விஜய் சேதுபதி, ஆனந்த் குமரேசன் என்பவரையும் அப்படிதான் தேர்ந்தெடுத்தார். அந்த நேரத்தில் ‘நடுவுல கொஞ்சம் பக்கம்’ வெளிவந்தது. படம் ஹிட் ஆகும் என்ற நம்பிக்கையில் ந.கொ.ப.கா வெளியான சூடு காய்வதற்குள் தயாரிப்பாளர் ஸ்டுடியோ 9 சுரேஷ் விஜய் சேதுபதிக்கு பத்து லட்சம் அட்வான்ஸ் கொடுத்திருக்கிறார். உடனே ‘வசந்தகுமாரன்’ என்ற படத்தை துவங்கினார் விஜய்சேதுபதி. ஆனந்த் குமரேசனை வைத்து ஆனந்தமாக துவங்கப்பட்ட படம், இயக்குனரின் போக்கு பிடிக்காமல் உடனே நிறுத்தப்பட்டது. அதுவும் அவரை அழைத்து வந்த விஜய் சேதுபதியாலேயே. ஆனால் வாங்குன அட்வான்சுக்கு படம் பண்ணி தருவதுதானே முறை?
2013 ல் தருவதாக சொன்ன கால்ஷீட்டை இன்றுவரை தராமல் இழுத்தடிக்கிறாராம் விஜய் சேதுபதி. எப்போது கேட்டாலும் ஏதாவது ஒரு சப்பை காரணத்தை சொல்லிவிட்டு தப்பி ஓடுவதே அவரது வேலையாக இருக்கிறதாம். பொறுத்து பொறுத்து பார்த்த தயாரிப்பாளர் சுரேஷ் சங்கத்தில் புகார் கொடுத்திருக்கிறார்.
குட் புக்குல எதுக்கு கோடு கிழிக்கிறீங்க விஜய் சேதுபதி?