எந்த சினிமாவும் ஆணவக் கொலை பற்றி சொல்லல! கவலைப்பட்ட பாடலாசிரியர்
தமிழ்சினிமாவில் வேகமாக வளர்ந்து வரும் கவிஞர்களில் குறிப்பிட வேண்டிய இடத்திலிருக்கிறார் முருகன் மந்திரம். ‘திக்கி திணறது தேவதை… வெட்கப்படுதொரு பூமழை’ என்ற இவரது குழந்தை பாடல் ஒன்று இப்பவும் ரேடியோ, யூ ட்யூபில் ஹிட்டடித்து வருவதை யாரும் மறுக்க முடியாது. காதல் சுகுமார் இயக்கத்தில் விரைவில் வெளிவரவிருக்கும் ‘சும்மாவே ஆடுவோம்’ படத்தில் இவர் நான்கு பாடல்களை எழுதியிருக்கிறார். ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்திருக்கிறார்.
இப்படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் சுமார் 100 பேர் மேடையில் இருக்க, யாரோ ஒரு சிலரின் பேச்சில் மட்டும்தான் விஷயம் இருந்தது. அப்படியொரு முக்கிய விஷயம் குறித்து தன் கருத்தை பதிவு செய்த முருகன் மந்திரம், மேன் ஆஃப் த மேட்ச் என்ற பெருமையோடு மேடையை விட்டு இறங்கினார்.
மேடையில் பேசிய டைரக்டர் காதல் சுகுமார் கூட படத்தின் கன்டென்ட் பற்றி சரியாக சொல்லாத நிலையில், “இந்த படம் சாதி குறித்தும் பேசுகிறது” என்றொரு புகை மூட்டத்தை எரியவிட்டுவிட்டு போனார் மந்திரம். அவர் பேசிய கருத்துக்களில் பல தனியாக மேடை போட்டு விவாதிக்க வேண்டிய விஷயம்.
“இனிமே தமிழ்நாட்லேர்ந்து சாதியை அழிக்கவே முடியாது. வேணும்னா ஒண்ணு செய்யலாம். சாதிகளை சமன் படுத்தலாம். அதற்கான முயற்சியில்தான் எல்லாரும் இறங்கணும். தமிழ்சினிமாவில் சாதி பெருமை பேசிய எத்தனையோ படங்கள் வந்திருக்கிறது. ஆனால் ஒன்று கூட ஆணவக்கொலைகள் பற்றி பேசவில்லையே என்ற வருத்தம் எனக்கு உண்டு” என்றார் முருகன் மந்திரம். இதே கருத்தை வைரமுத்து மாதிரியான ஒரு கவிஞர் சொல்லியிருந்தால் பற்றிக் கொண்டு எரிந்திருக்கும். சொன்னது சின்ன தீக்குச்சிதானே?
கொஞ்சம் தாமதமாகக் கூட பற்றிக் கொள்கிறதா பார்ப்போம்!
Vanmam???
It should be rummy
kauravam film by radha mohan