சலீம் யாருக்கு? உரிமை பிரச்சனையில் உதறல் எடுத்த விஜய் ஆன்ட்டனி

ஏதோ சொந்த பணம் போட்டு படம் எடுப்பதை போல கோடம்பாக்கத்தில் கோதா பண்ணிக் கொண்டிருக்கும் இசையமைப்பாளர் விஜய் ஆன்ட்டனி, முதல் படத்திலும் சரி. இரண்டாவதான ‘சலீம்’ படத்திலும் சரி! ஓவராக உள்ளே நுழைந்து படுத்தி எடுத்துக் கொண்டிருக்கிறார் டெக்னீஷியன்களை. அவர்களின் சாபமோ என்னவோ? பிரச்சனை இப்போது அவரை படுத்தி எடுத்துக் கொண்டிருக்கிறதாம்.

உண்மையில் இந்த படத்தின் தயாரிப்பாளர் வேறொருவர். இவர் ஏற்கனவே தமிழில் ‘மாசாணி’ என்ற படத்தை தயாரித்திருக்கிறார். அவர்தான் விஜய் ஆன்ட்டனியை தொழில் பார்ட்டனராக சேர்த்துக் கொண்டு இந்த ‘சலீம்’ படத்தை தயாரித்து வருகிறார். நடுவில் ஒட்டிக் கொண்டது ஸ்டுடியோ 9 என்ற நிறுவனம். சுமாரான அளவே பணம் போட்டு உள்ளே இறங்கிய இந்த நிறுவனம், இப்போது முழு படத்தையும் தன் கட்டுப்பாட்டில் எடுத்துக் கொள்ள முயல்கிறதாம். முதலில் பணம் போட்ட மவராசன் அதை அனுமதிப்பாரா? ‘பிரதர்… நீங்க உங்க பணத்தை வாங்கிட்டு ஒதுங்கிருங்க’ என்று ஸ்டுடியோ 9 ஐ வற்புறுத்த, அந்த நிறுவனமோ ‘முடியவே முடியாது. நீங்க ஒதுங்குங்க’ என்று மல்லுக்கு நிற்க, இவர்கள் சண்டையில் யாருக்கு சப்போர்ட் பண்ணுவது என்கிற மண்டை குடைச்சல் வந்துவிட்டதாம் விஜய் ஆன்ட்டனிக்கு.

இசையமைக்கிற வாய்ப்புகள் க்யூ கட்டி நின்ற போதும் அதிலும் கவனம் செலுத்தாமல், சம்பளமே கூட வாங்காமல் இந்த படத்தில் நடிச்சிருக்கேன். ‘ரெண்டு பேரும் சண்டை போட்டுகிட்டு எனக்கு வர வேண்டிய பணத்துல முக்காடு போட்றாதீங்க’ என்று கதற ஆரம்பித்திருக்கிறாராம். ‘இவங்க மூணு பேரோட சண்டை முடிந்த பிறகுதான் படத்தின் ரிலீஸ் வேலையில் மெனக்கெடுவார்கள். இதுல எங்களை எங்க கவனிக்க போறாங்க?’ என்று விநியோகஸ்தர்கள் கொட்டாவி விட ஆரம்பித்திருக்கிறார்களாம்.

சகுனம் நல்லாதான் இருக்கு! விஜய் ஆன்ட்டனியோட ஆர்மோனிய பொட்டிய எதுக்கும் துடைச்சு எண்ணை போட்டு வைங்கப்பா. சலீமுக்கு பின்னாடி தேவைப்படும்!

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
ஆவி லிப் கிஸ் அடிக்குமா? பதில் சொல்ல நடிகை வெட்கம்!

இந்தியா பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி நடந்தால் போதும், நாடே பேய் பிடித்து அலையாத குறைதான்! அடுத்தவன் நகத்தை கடித்து துப்புகிற அளவுக்கு டி.வி யை யே பார்த்துக்...

Close