கிழிடா போஸ்டரை! வாய்மையால் டென்ஷன் ஆன காங்கிரஸ் தொண்டர்கள்!
காங்கிரஸ் கட்சியின் பெருமையை(?) கட்டுப்பாடு இல்லாமல் கொட்டி கொட்டி விற்றுக் கொண்டிருக்கிற ஒரே இடம், சத்யமூர்த்தி பவன்தான்! இரண்டு அன்ட்ராயர்கள், நான்கு வேட்டிகளை ஒரே நேரத்தில் அணிந்து உள்ளே சென்றாலும், வெளியே வரும்போது கட்சிக்காரரின் உடம்பில் ஒட்டுத்துணி இருந்தால், அது முன் ஜென்ம புண்ணியம்! சொந்தக் கட்சி விவகாரத்திலேயே இப்படி விகாராமாகிக் கிடக்கும் அவர்கள், ஒரு பிரச்சனை தானாக வந்து மாட்டினால் விட்டுவிடுவார்களா?
ஆக்ரோஷமாக கிளம்பிவிட்டார்கள். எல்லாம் சமீபத்தில் திரைக்கு வந்து கலவையான விமர்சனங்களுக்கு ஆளாகியிருக்கும் வாய்மை படம் ஏற்படுத்திய வம்புதான். பேரறிவாளன் கதை என்றும், ராஜீவ் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட கைதிகளுக்கு மரண தண்டனை வழங்கக்கூடாது என்பதை வலியுறுத்தும் படம் என்றும் ரிலீசுக்கு முன்பே பேசப்பட்ட படமாச்சே? சொந்தக் காசு கொடுத்து தியேட்டருக்கு சென்று பார்த்தார்களாம் சில தொண்டர்கள்.
அப்புறமென்ன? யார் வேஷ்டியை கிழிக்கலாம் என்று பரபரக்கும் கைகளுக்கு வேலை கொடுக்க ஆரம்பித்துவிட்டதாக கிசுகிசுக்கிறது சத்யமூர்த்தி பவன் வட்டாரம்.
ஒன்றிரண்டு குறியீடுகள் இருந்தாலே சும்மா விடமாட்டார்கள். வாய்மை படத்திலோ படம் முழுக்க காங்கிரஸுக்கு எதிரான காட்சிகளும் வசனங்களும் நிறைந்திருந்தன. இயக்குனர் பிஜேபி பார்ட்டி போல… படத்தின் தொடக்கத்தில் வரும் பாடலில் மோடியை கொடியேற்ற விட்டிருந்தார். அதே பாடலில் 2ஜி அலைக்கற்றை ஊழலை காண்பித்திருந்தார். படத்தின் முதல் காட்சியே இந்திரா காந்தியும், ராஜிவ் காந்தியும் கொல்லப்படுவது தான். பின்னர் அதே பாணியில் ஒரு காங்கிரஸ் தலைவர் கொல்லப்படுவதாக காட்டியிருந்தார். கொல்லப்படும் தலைவர் நெஞ்சில் இருக்கும் பேட்சில் காந்தி, நேரு படங்கள் இருக்கும்.
கொலையாளி எனக் குற்றம் சாட்டப்படும் நபர்களுக்கு ஆதரவாக பேசுபவராக சாந்தனு நடித்திருக்கிறார். அது மட்டுமல்லாமல் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தான் சாட்சி வாங்கியது தவறு. விசாரணையில் குழப்பம் இருந்த்து உண்மைதான் என்று ஒப்புக்கொண்ட சிபிஐ அதிகாரி கேரக்டரை அப்படியே பாக்யராஜை வைத்துக் காட்டியிருந்தார்.
இதெல்லாம்தான் காங்கிரஸை கொதிக்க வைத்துள்ளது. மேலிடத்துக்கு விஷயத்தை எடுத்து சென்றிருக்கிறார்கள். அங்கிருந்து பதில் வருகிற வரைக்கும் கூட பொறுமையில்லாத சிலர், வாய்மை படத்தின் போஸ்டரை கிழிக்கும் வேலைகளில் இறங்கியிருக்கிறார்களாம்.
போஸ்டர் கிழியுதோ, போஸ்டர் ஒட்டுற தொழிலாளியின் வேஷ்டி கிழியுதோ? ஆக மொத்தம் இன்னும் சில நாட்களில் கலவரம் நிச்சயம் என்பது மட்டும் புரியுது!
To listen the audio click below :-
Good Publicity