கோழியே வந்து குண்டான்ல உட்காருதே? இதுதாண்டா கபாலி களிப்பு!

நெட்வொர்க் விஷயத்தில் கில்லியடித்த ரிலையன்ஸ் நிறுவனம் சினிமா பக்கம் வந்தது “குட் வொர்க்தானா?” என்ற கேள்வி அவர்களுக்கே வந்திருக்க வேண்டும். இந்தி படவுலகத்தை பொறுத்த வகையில் சில்லறைகளையும் நோட்டையும் எண்ணி எண்ணி குவித்தவர்கள், தமிழில் வாங்கிய படங்களில் மட்டும் வண்டி வண்டியாக நஷ்டம். ஒன்றிரண்டு படங்கள் கை கொடுத்தாலும், விக்ரம் நடித்த ‘டேவிட்’ போன்ற படங்களையெல்லாம் வாங்கினால் என்னாகும்? துட்(டு) வொர்க் செம வீக் ஆகிவிட்டது.

சற்று ஒதுங்கியிருந்தால் சவுகர்யம் என்று நினைத்தவர்கள் கண்ட படங்களுக்கும் அட்வான்ஸ் கொடுத்து கமிட் பண்ணுவதை கணிசமாக குறைத்துக் கொண்டார்கள். விட்டதை பிடிக்க வேண்டும் என்றால், வலுவான… ஒரே நாளில் ஒட்டுமொத்த தமிழ்நாடும் கவனம் செலுத்தக் கூடிய படங்களாக இருந்தால் பார்க்கலாம் என்று இருந்தவர்களுக்கு, ஒரே பளிச் படம் கபாலிதான். எவ்வளவு விலை கொடுத்தேனும் கபாலியை வாங்கிவிட வேண்டும் என்று கணக்கு போட்டிருக்கிறதாம் அந்நிறுவனம்.

தங்கள் ஆசையை முறைப்படி படத் தயாரிப்பாளர் தாணுவுக்கு தெரிவித்திருப்பதாக கூறப்படுகிறது.

அப்புறமென்ன… கோழியே வந்து குண்டான்ல உட்காருது. மசாலாவை தடவி மத்தியான ஏப்பத்துக்கு தயாராகிவிட வேண்டியதுதானே?

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
Hitler- Many Directors excellent interview- Video

Close