கார்த்திக் சுப்புராஜ் மீது ஐந்து கோடி கேட்டு மானநஷ்ட வழக்கு! ஜிகிர்தண்டா தயாரிப்பாளர் முடிவு?

தமிழ் சினிமா தலையில் வைத்து கொண்டாடும் இயக்குனர்களில் பலரும், தனக்கு வாழ்வளித்த தயாரிப்பாளருக்கு மொளகா அபிஷேம் பண்ணிவிட்டுதான் அடுத்த வேலையை பார்க்கிறார்கள். அப்படியொரு இயக்குனராக ஜொலிக்கிறார் கார்த்திக் சுப்புராஜ். ஜிகிர்தண்டா படத்தை எடுக்கும் போதே தயாரிப்பாளருக்கு லாஸ் ஏற்படுத்திய புண்ணியவான் இவர். ஐம்பத்திரண்டு நாட்களில் படத்தை முடித்துவிடுவதாக கூறிவிட்டு, 80 நாட்கள் படப்பிடிப்பு நடத்தி, அதிலேயே ஒரு கோடியே முப்பத்தைந்து லட்சம் வரைக்கும் தயாரிப்பாளருக்கு லாஸ் ஏற்படுத்தினாராம். அதோடு விட்டாரா? படத்தை ஒரே நாளில் தெலுங்கு தமிழ் இரு மொழிகளிலும் ரிலீஸ் செய்ய நினைத்த தயாரிப்பாளருக்கு போட்டார் ஒரு லாக்!

இந்த படத்தின் இந்தி மொழி மாற்று உரிமையில் எனக்கு நாற்பது சதவீதம் பங்கு வேண்டும். அப்படி கொடுக்காத வரைக்கும் இந்தி ரீமேக் ஒப்பந்தத்தையும், தெலுங்கு பட வெளியீட்டையும் நிறுத்த வேண்டும் என்று நீதிமன்றத்தில் தடை ஆணை வாங்கிவிட்டார். வேறு வழியில்லாமல் தமிழில் மட்டும் ஜிகிர்தண்டாவை வெளியிட்டார் தயாரிப்பாளர் கதிரேசன். எப்படியோ பல மாதங்களாக நடந்த வழக்கில் இந்த இடைக்கால தடையை தற்போது விலக்கியிருக்கிறது நீதிமன்றம். அதுமட்டுமல்ல, ஜிகிர்தண்டா படத்தின் அனைத்து உரிமைகளும் தயாரிப்பாளரிடம்தான் இருக்கிறது. அதில் உரிமை கொண்டாட இயக்குநர் கார்த்திக் சுப்புராஜுக்கு எந்த உரிமையும் இல்லை என்று கூறியிருக்கிறது.

சந்தோஷம்… ஆனால் வந்த நஷ்டம் வந்ததுதானே? ஜிகிர்தண்டா தமிழில் வெளியாகி இத்தனை மாதம் கழித்து தெலுங்கில் வெளியிட முன்வந்தால், அப்போது கேட்ட மூன்றரை கோடிக்கே இப்போதும் கேட்பார்களா? கார்த்திக் சுப்புராஜின் செயலால் சுமார் ஐந்து கோடி ரூபாய் வரைக்கும் நஷ்டப்பட்டிருக்கிறார் தயாரிப்பாளர் கதிரேசன். தனது நிறுவனத்தின் மீதும் களங்கம் ஏற்படுத்திய அவர் மீது மான நஷ்ட வழக்கு தொடரும் முடிவிலும் இருக்கிறாராம்.

அவர் மீது மான நஷ்ட வழக்கு போடப்படும் தகவலை இன்று பத்திரிகையாளர்களை சந்தித்த ஜிகிர்தண்டா தயாரிப்பாளர் கதிரேசனின் மனைவி திருமதி கலைச்செல்வி மற்றும் வழக்கறிஞர் எஸ்.முத்துராமன் ஆகியோர் தெரிவித்தார்கள்.

இவர் உரிமை கொண்டாடும் அந்த படத்தின் கதையே இவருடைய சொந்த கதையில்லை. வேறொரு ஹாலிவுட் படத்திலிருந்து சுடப்பட்டது என்ற விஷயம் அப்போதே ஊடகங்களில் வந்ததே…!

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
புலி படத்தை ஷேர் பண்ணினா ‘போலீச கூப்பிடுவேன்… ’ -கடும் கோபத்தில் சிம்பு தேவன்

இன்று அவசரம் அவசரமாக பிரஸ்சை சந்தித்தார்கள் புலி படத்தின் தயாரிப்பாளர்களும், அப்படத்தின் இயக்குனர் சிம்புதேவனும். என்னவாம்? ‘இதுவரை நாங்க அஃபிசியலா புலி படத்திலேர்ந்து ஒரு ஸ்டில்லையும் வெளியிடல....

Close