நள்ளிரவில் போன்… எடுத்தால் ரத்தக்காட்டேரி? பல் டாக்டர் அழகியின் பப்ளிசிடி ஸ்டன்ட்!

‘குறத்தி வாடி என் குப்பி…’ என்பதெல்லாம் அறுபதுகள் கால கட்ட சினிமாவில்தான். இப்போதெல்லாம் எந்த நடிகையை கேட்டாலும் எம்பிஏ என்கிறார்கள். எம்.பி.பி.எஸ் என்கிறார்கள். குறைந்த படிப்பில் ஒருவரும் இல்லை. சுளையாக துட்டு வரும் என்று நடிக்க வந்த காலம் போய், கலைக்காக நடிக்கிறேன்… என்று சொல்கிற அக்கறை அழகிகளும் அடுத்தடுத்து வந்து கொண்டிருப்பதால், கோடம்பாக்கமே ஒரே டீசன்ட் மயம்!

அப்படியொரு அழகியாக வந்திருப்பவர்தான் மாயா. இவர் ஒரு பல் மருத்துவராம். ஜின் என்ற படத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார். நாற்பது நாட்கள் நடுக்காட்டில் படப்பிடிப்பு. ஜில்லென்ற குளிர். எல்லாவற்றையும் தாங்கிக் கொண்டு இந்த படத்தில் அவர் நடித்தது தமிழ்சினிமாவை புரட்டிப் போட்டுவிட வேண்டும் என்ற ஆர்வத்தாலும், அக்கறையாலும்தான். ஆனால் இந்த படம் பேய் படம்! பெரும்பாலும் நள்ளிரவில் எடுக்கப்பட்டதால், இவர் நிழலையே இவர் பேய் என்று நினைத்து மிரண்டு போகிற சூழ்நிலை பலமுறை ஏற்பட்டதாம். (உங்க அழகுக்கு நிழலே இனிக்குமே, ஹிஹி…) போதும் போதாதற்கு காளி வெங்கட், முண்டாசுப்பட்டி முனிஸ்காந்த், மெட்ராஸ் கலை என்று மாயாவை ரவுண்டு கட்டி மிரட்டிவிட்டார்களாம்.

ஒரு நள்ளிரவில் இவருக்கு போன். எடுத்தால் எதிர்முனையில் கெக்கெக்ககேகே என்று ஒரே சிரிப்பு. “ஒடனே பல்லு கட்டணும். கொஞ்சம் வர முடியுமா? ரத்தம் குடிச்சு நாளாச்சு” என்றொரு பெண் குரல். யாரோ கலாய்க்கிறாங்கன்னு தெரியுது. இருந்தாலும் நான் நடுங்கிட்டேன் என்றார் மாயா.

தமிழ் சினிமா டைரக்டருங்க நடிக்க சொல்லித் தர்றாய்ங்களோ இல்லையோ? சுவாரஸ்யமாக பொய் சொல்ல சொல்லித் தந்துர்றாய்ங்கப்பா…! இருக்கட்டும். அழகிங்க பொய் சொன்னா ஆஹான்னு கேட்டுட்டு போக வேண்டியதுதான்!

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
அப்படின்னா அஜீத் தமிழனில்லையா? டி.ராஜேந்தர் பேச்சால் சலசலப்பு?

அவரு நல்லவருன்னு சொன்னா, அப்ப நான் கெட்டவனா? என்று கேட்கிற காலம் இது. நீயும் நல்லவன்தான் என்றொரு பதில் வரும் வரைக்கும் மனப்போராட்டமும், மானப் போராட்டமுமாக அல்லாடி...

Close