இது ஷங்கர் சார் படமா? ஆடை வடிவமைப்பாளர் தமிழ்செல்வன் வியப்பு

இயக்குனர் ஷங்கர் வெளியீட்டில் வரும் டிசம்பர் 25ஆம் தேதி வெளிவரவுள்ளது ‘கப்பல்’. ஆடை வடிவமைப்பாளர் தமிழ் செல்வன் இப்படத்தில் பணி புரிந்த அனுபவத்தைப் பற்றி கூறியதாவது “ இப்படம் எனக்கு சிறந்த அனுபவங்களை பெற்று தந்தது. இயக்குனர் கார்த்திக் இந்த படத்தில் வரும் அனைத்து ஆடைகளுமே வண்ணமயமாகவும், பாடல்காட்சிகளில் வரும் ஆடைகள் சிறு கதைகளைக் கொண்டதாய் அமைய வேண்டும் என்று எண்ணினார். அதற்க்கேற்ப பாரம்பரிய, மேற்க்கத்திய, பிரமிப்பூட்டும் பல ஆடைகள் வடிவமைக்கப்பட்டது.”, என்றார்.

சென்னையில் ஆடை வடிவமைப்பாளர் படிப்பினை முடித்த பின்பு சொந்தமாக  ஃபேஷன் டிசைன் நிறுவனத்தை தொடங்கிய தமிழ், பல முன்னணி நட்சத்திரங்களுக்கு ஆடை வடிவமைத்தார். “காதல் காசாட்டா… பாடலிற்கு முழுக்க முழுக்க சாக்லேட்டுகளாலான ஆடைகளை வடிவமைத்தேன். இதற்கான வேலைகளை என் முழு குடும்பமே செய்தது. பின் பூக்களால் தைக்கபட்ட ஒரு ஆடையும் மிகவும் சவால் நிறைந்ததாய் அமைந்தது. பஞ்ச பாண்டவர்கள் வேஷதிற்க்காக ஆடைகள் வடிவமைக்கும்பொழுது நிறைய வேலைபாடுகள் மேற்கொள்ள நேர்ந்தது” என்றார்.

“ஒரு நாள் ஷூட்டிங்கில் பல வகை காஸ்டியும்களைப் பார்த்த எனது உதவியாளர், இவ்வளவு காஸ்டியும்ஸ் இருக்கே இது ஷங்கர் சார் படமா என்ன என்று கேட்டார். அப்போது நாங்கள் நினைக்கவில்லை  படம் அவரது தயாரிப்பாக வெளி வரும் என்று. அறிமுக கலைஞரான எனக்கு வேறென்ன பெருமை வேண்டும்? என்றார்.கதாநாயகி சோனம் பஜ்வா நான் வடிவமைத்த உடைகள் பாலிவுட் தரத்தில் இருப்பதாக கூறினார். அந்த உடைகள் அவரை ஒரு கடல் கன்னி போல் அழகாக காட்டும் ‘ என கூறினார் தமிழ் செல்வன்.

 “Designing for the delight”: Costume designer Tamil Selvan”

“This film would make you laugh, cry and enjoy. It was a delight to cruise with the team Kappal “ started with an inside-out note Tamil Selvan, the costume designer of the movie Kappal. “Cinema has always been a passion for me. I have learnt many things from cinema since my childhood. Started my very own boutique after finishing my studies  in Fashion designing from the National School of Design”, He continued.

“After getting chances to design for few of the celebrities from the tinsel town. I worked really hard to make it for the big screen. It’s a big time learning experience with Director Karthik who wanted the costumes to be colourful and  unique thematic designs when it comes to songs“ said the debutant costume designer

On sharing his experience of working on some of the typical costumes in the film, he said “Designing a flower gown with full of  real flowers and costumes made of chocolates and candy for the song “kadhal casatta..” was a challenging task. My whole family worked in building the chocolate costumes. On the other hand the pirates costumes held us to take a tight breath, as we created all the accessories for ourselves. When the Pandavas attire gave us a lot to work on its detailing , My assumption of it a default  drama costume was totally wrong.

 I always aspired to create my own identity in the field of costume designing.I was absolutely delighted when i was offered ‘ Kappal’. When an associate of mine surprised at the range of costumes asked’ boss, is this Shankar sir’s film, why are we  showing such a wide range of costume collection , i didn’t realize that one day this film will be released under the banner of Shankar sir.It is indeed a pride to find my name in the film to be released under ‘S’ pictures. I thank my producers I studios and Director Karthik for providing me this great platform.  we have tried Traditional, western and fantasy kind of costume that would draw audience’s attention, Sonam bajwa the heroine appreciated and said that the costumes are  equivalent to Bollywood style , she looked dazzling and I’m sure she will be the biggest catch  of this ocean- The mermaid’ Tamil Selvan, the next-gen costume designer sums with a promising words.

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
               புற்றுநோய் விழிப்புணர்வு  பற்றிய குறும்படம்                              “அலங்காரம்”

புற்றுநோய் விழிப்புணர்வு பற்றிய படம் தான் இந்த அலங்காரம் குறும்படம். இந்த இந்த குறும்படத்தின் விழா வடபழனியில் உள்ள ஆர்.கே.வி ஸ்டுடியோவில் நடைபெற்றது. விழாவில் கலந்துகொண்ட ஜி.கே.வாசன்...

Close