இப்ப வாங்கடா பார்க்கலாம்! கபாலி திருடர்களுக்கு தாணு சுளுக்கு!

நகைக் கடையில் துளை போட்டு நைசாக எடுப்பதற்கு நிகரானது திருட்டு விசிடி. அடுத்தவர்களின் உழைப்பை, பணத்தை, சந்தோஷத்தை, லட்சியத்தை இப்படி சந்து வழியாக கையை நீட்டித் திருடும் திருடர்களை எப்படி தடுப்பது? எதை கொண்டு அடிப்பது? என்று கவலை கொண்டு கண்ணீர் சிந்திக் கொண்டிருக்கிறது தமிழ் பட தயாரிப்பாளர்களின் மனசு. இவர்களின் நீண்ட கால புலம்பல், வெறும் புலம்பலாகவும் பொழுதுபோக்காகவும் மற்றவர்களால் பார்க்கப்பட்டு வருவது இன்றளவும் தொடர்கிறது.

இந்த நிலையில்தான் கபாலி படத்தின் தயாரிப்பாளர் தாணு, சென்னை உயர்நீதிமன்றத்தை நாடியிருக்கிறார். அவர் கொடுத்துள்ள மனுவில், எந்தப்படம் வந்தாலும் அதை உடனடியாக தங்கள் வெப்சைட்டில் வெளியிட்டு லாபம் கொழித்து வரும் சுமார் 170 இணையதளங்களின் பெயர்கள் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த இணையதளங்களை இந்தியாவில் முடக்க வேண்டும் என்றுதான் கோரிக்கை விடுத்திருக்கிறார் தாணு.

கபாலி வெளியாகும் முன்பே, கபாலித் திருடர்கள் அதை எப்படி மக்களிடம் கொண்டு சேர்ப்பது என்று திட்டம் போட்டு வரும் நிலையில், இந்த மனு நிச்சயம் அத்தகைய திருடர்களுக்கு சுளுக்குதான். ஆனால் திருடர்கள் எப்போதும் பறி கொடுப்பவனை விட பலமாக இருப்பதால், தாணுவின் முயற்சியில் எவ்வளவு வெற்றி என்பதை போக போக பார்க்கலாம்.

4 Comments
  1. Ghazali says

    As a president of Tamil Film Profucers Council, at least 10% of effort if he had taken for other Tamil films to control piracy we would have appreciated him & support him whole heatedly for his efforts on #Kabali.
    – Ghazali
    Director & Producer of
    ‘Saaindhaadu’.

  2. Dandanakka says

    பட டிக்கெட்டின் விலை அரசு நிர்ணயித்த தொகையை விட அதிகம் வசூல் செயயும் தியேட்டர் மீதும் நடவடிக்கை எடுக்க சொல்லாதது ஏன்? உங்களுக்கு வந்தால் ரத்தம்,அடுத்தவனுக்கு வந்தால் தக்காளி சட்னியா?

  3. Dandanakka says

    அரசாங்க முத்திரையிடப்பட்ட நுழைவு சீட்டில் குறிப்பிடப்பட்ட 20 இந்திய ரூபாயை விட 10 மடங்கு முதல் 100 மடங்கு வரை விலை அதிகமாக வைத்து நுழைவு சீட்டு விற்க படும். அதிகமா வசூல் செய்யும் அனைத்து திரைஅரங்ககளையும் முதல் காட்சிக்கு முன்பே கையும் களவுமா புடிச்சி திரை அரங்கை மூட வேண்டும்

  4. anbu says

    good effort…but y did not take any action for other movies like this? first of all try to stop theatre robbery..after that people would not sit at home and watch the movies in DVD even they get DVD on their hands free of cost.

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
Shivalinga Pooja Stills Gallery

Close