தனுஷ் கண்டிஷன்! அதிர்ச்சியில் சிவகார்த்திகேயன்
‘என்னதான் பர்சனல் பாலிட்டிக்ஸ் என்றாலும் அண்ணன் தனுஷ் இப்படி பண்ணியிருக்கக் கூடாது’ என்று சிவகார்த்திகேயன் ரசிகர்கள் கண்ணீர் விட்டு கதறப்போவது நிச்சயம். ஏனென்றால் கிடைக்கிற தகவல்கள் அப்படி! ‘நானும் அவரும் அப்படியேதான் இருக்கோம். ரெண்டு பேருக்கும் நடுவுல சண்டை மூட்டிவிட நினைக்கிற எல்லாருக்கும் ஏமாற்றம் நிச்சயம்’ என்று தனுஷும் சிவகார்த்தியேனும் தோளில் கைபோட்டுக் கொண்டு கூவி கூவி மறுத்தாலும், உள்ளுக்குள் ஓடும் ‘அண்டர் கரண்ட்’ ரொம்பவே ஆபத்தாக இருக்கிறது.
தனுஷின் கம்பீரத்தை வேலையில்லா பட்டதாரிக்கு முன், வேலையில்லா பட்டதாரிக்கு பின் என்று இரண்டு வகையாக பிரிக்கலாம். அதற்கு முன்பு அவர் எங்கு போனாலும், அவரிடமே அவர் வளர்த்துவிட்ட சிவகார்த்திகேயனை புகழ்ந்து பேச ஆரம்பித்தார்கள். வியாபாரிகள் இன்னும் மோசம். முதல்ல சிவகார்த்திகேயன் படத்துக்கு ஒரு விலை சொல்லுங்க. அப்புறம் உங்க படத்தை பற்றி பேசலாம் என்றெல்லாம் வெறுப்பேற்ற ஆரம்பித்தார்கள். இப்படி கொஞ்சம் கொஞ்சமாக ரெண்டு பேர் நட்பிலும் கரையான்களை அவிழ்த்துவிட்டவர்கள், கிட்டதட்ட அந்த பிரண்ட்ஷிப்பை முடிவுக்கே கொண்டு வந்துவிட்டார்கள். நல்லவேளை… வேலையில்லா பட்டதாரி ஓட்டமாய் ஓடி தனுஷின் மானத்தை காப்பாற்றியது. இப்போது சிவகார்த்திகேயனின் நேரடி எதிரிகளோடு உறவாட ஆரம்பித்திருக்கிறாராம் தனுஷ்.
போகட்டும்… இப்போது நாம் சொல்ல வருவதுதான் அதிமுக்கிய அடேயப்பா மேட்டர்! தற்போது தனுஷ் தயாரித்து வரும் காக்கிசட்டை (டாணா) படத்தை வேறொரு நிறுவனத்திற்கு விற்றுவிட்டார். ஒரு பெரிய அட்வான்சும் கைக்கு வந்தாச்சு. இந்த நிலையில் இவர் நடித்து வரும் அனேகன் படமும் முடிகிற நிலையில் இருக்கிறது. தனுஷின் விருப்பம் என்ன தெரியுமா? காக்கி சட்டை எப்போ திரைக்கு வருதோ, அதே நாளில் நம்ம அனேகனை ரிலீஸ் பண்ணுங்க என்பதுதான். ஆரம்பத்தில் ஏதோ விளையாட்டுக்காக சொல்கிறார் என்று நினைத்த பலருக்கும் அதிர்ச்சி. இந்த விஷயத்தில் ரொம்பவே சீரியஸ் ஆக இருக்கிறாராம் அவர். அனேகன் பட நிறுவனத்திடம் அவர் வைத்திருக்கும் முக்கிய கோரிக்கையே இதுதான் என்கிறார்கள்.
நல்லாயிருந்த பிரண்ஷிப்பை நாசமா போக வச்ச துஷ்டர்களே… நல்லாயிருங்க!