டங்கா மாரின்னா இன்னாபா…? பாடலாசிரியரை பதற விட்ட தனுஷ்!

ஒரு படத்தின் கதை ஹீரோயினை சுற்றியிருக்கிறதோ, இல்லையோ? அந்த படம் சம்பந்தப்பட்ட விழாக்கள் அல்லது நிகழ்ச்சிகளில் பேசும் அத்தனை பேரும் ஹீரோயினை ஒரு சுற்று சுற்றி வராமலிருக்க மாட்டார்கள். அந்த இனிய நிகழ்வு ‘அனேகன்’ படத்தின் பாடல் வெளியீட்டு விழாவிலும் நடக்க, ஐயோ பாவம்… அந்த ‘பாப்பா’விக் கிளிக்கு தமிழ் தெரியாது. மும்பையே சேர்ந்த அமைரா தஸ்துர் என்ற அந்த கிளியை சுற்றி ஒரு சின்ன ஹாஸ்ய வட்டம் போட்டார் படத்தின் இயக்குனர் கே.வி.ஆனந்த்.

‘இந்த படத்திற்கு ஒரு ஹீரோயின் தேடுனோம். மும்பையிலிருந்து அமைரா கிடைச்சார். பார்க்க loos மாதியே இருப்பார். ஆனால் நடிப்பில் பின்னிட்டார். பொதுவா நம்ம காஜல் அகர்வால், தமன்னாவெல்லாம் பத்து பட்டன் வச்சுருப்பாங்க. அழுகை வேணும்னு கேட்டா ஒரு பட்டனை அழுத்துவாங்க. அழுகை வரும். சிரிப்புக்கு இன்னொரு பட்டன். இப்படி டெம்ப்ளட்டா பத்து பட்டன் இருக்கும். ஆனால் அமைரா அப்படியில்ல. இப்படி சொடக்கு போடறதுக்குள்ள பட் பட்டுன்னு எக்ஸ்பிரஷன் கொடுக்கிறாங்க என்றார்.

தனுஷ்தான் ஹீரோ என்றாலும் படத்தில் அவருக்கு நிகரான ஒரு கேரக்டர் இருக்கிறதாம் அந்த கால நவரச நாயகன் கார்த்திக்குக்கு. அந்த கேரக்டர்ல அவரை நடிக்க வைக்கலாம்னு என் அசிஸ்டென்ட்ஸ் சொன்னப்ப எனக்கு அவர் மேல நம்பிக்கை இல்ல. ஏன்னா அவர் நடிச்ச படத்திற்கு நான் கிளாஷ் வொர்க் பண்ணியிருக்கேன். ஒழுங்கா ஷுட்டிங் வரமாட்டார். அவரை ஹேண்டில் பண்றது ரொம்ப கஷ்டம். இருந்தாலும் அவங்க சொன்னதுக்காக அவரை மீட் பண்ணினேன். சார்… நீங்க இந்த படத்துல நடிக்க மாட்டீங்கன்னு பெட் கட்டிட்டு வந்திருக்கேன் என்று சொல்லிவிட்டுதான் கதையையே சொன்னேன். முழுசா கேட்டவர் ரெண்டு நாள் டைம் கேட்டார். ரெண்டு நாள் கழிச்சு அவர் ஓ.கே சொன்னது எனக்கு ஆச்சர்யம் என்றார் கே.வி.ஆனந்த். எல்லா படத்திலும் ஏதாவது ஒரு முக்கியமான பிரச்சனையை எடுத்துக் கொண்டு விவாதிக்கிற ஆனந்த், இந்த படத்தில் ப்யூர் காதல் கதையை சொல்லியிருக்கிறாராம். (இது மறு ஜென்ம கதை என்பதையும் ஒப்புக் கொண்டார் அவர்) படத்தில் தனுஷுக்கு நான்கு கெட்டப்புகள்.

படத்தில் நார்த் மெட்ராஸ் லொகேஷனுக்கு தனுஷ் ஆடிய ஒரு பாடலும், அதற்கு ஹாரிஸ் ஜெயராஜ் போட்டிருக்கிற ட்யூனும்… இந்த வருஷத்தின் மெகா சூப்பர் ஹிட் பாடல் அதுவாகதான் இருக்கும். பாடலை எழுதியிருக்கிறார் அறிமுக பாடலாசிரியர் ரோகேஷ். முதல் வரியே இப்படி ஆரம்பிக்கிறது. ‘டங்கா மாரி ஊதாரி… புட்டுகினே நீ நாறி…’ மேடையில் அவரை அழைத்து தோளில் கைபோட்டுக் கொண்டு தனுஷ் கேட்டார்.

அதென்னாபா டங்கா மாரி?

அதுவா சார்… அப்படின்னா மாத்தி மாத்தி பேசுறேன்னு அர்த்தம் என்றார் ரோகேஷ். இன்னும் இதுபோன்ற ஏராளமான வரிகள் பாடலில் இருக்கிறதாம். தனுஷையே வியக்க வைத்தார் அந்த இளைஞர்.

தம்பிய விட்டா திருக்குறளுக்கே உரை எழுதுவாரு போலிருக்கே?

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
விஜய் ஆசை? புறக்கணித்த முருகதாஸ்!

‘கத்தி டூப்ளிகேட்டா, ஒரிஜனலா?’ என்கிற விவாதம் ஒரு புறமிருக்க, அப்படத்தை ரீமேக் செய்யும் முயற்சியில் இறங்கியிருக்கிறார் முருகதாஸ். ஹாலிவுட் படத்திலிருந்து சுடப்பட்ட படமாக இருந்தாலும் தனது கஜினியை...

Close