விஜய் சேதுபதியும் சிவகார்த்திகேயனும் ஈக்குவலா? தனுஷ் சந்தேகம்?

“அவருக்கு சம்பளம் கொடுக்கிற அளவுக்கு எங்க வுண்டர்பார் தயாரிப்பு நிறுவனம் பெரிய நிறுவனமில்லீங்க!” தனுஷ் குறிப்பிட்ட அந்த ‘அவர்’ சிவகார்த்திகேயன்தான்! “இருந்தாலும் எங்க கம்பெனியில் அறிமுகப்படுத்தப்பட்ட ஒருவர் இன்னைக்கு இவ்வளவு பெரிய இடத்துல இருக்கிறது பெருமைதான். சந்தோஷம்தான்” என்றார் தனுஷ். இருவருக்கும் நடுவில் லேசாக புகைச்சல் என்ற செய்தியை இன்னும் கொஞ்சம் புகை போட்டு உறுதியாக்கியது அந்த பதில். நல்லவிஷயம். அதற்கப்புறம் அவர் முகத்தில் வந்த அந்த சந்தேகம் சரியா, தப்பா?

சிவகார்த்திகேயனுடைய நேரடி போட்டியாளரான விஜய் சேதுபதியை நீங்க வளர்த்து விடுறீங்கன்னு…? கேள்வியை முடிப்பதற்குள் “அப்படியா? அப்படியொரு போட்டி இருக்கா அவங்களுன்னு நடுவுல?” என்றார் தனுஷ்.

“விஜய் சேதுபதிய வச்சு நான் ஏதோ நாலைஞ்சு படம் எடுத்துட்ட மாதிரி கேட்கிறீங்க? நானும் ரவுடிதான் ஹிட்டுக்கு பிறகு மீண்டும் எங்க கம்பெனியில் சேர்ந்து படம் பண்ணனும்னு முடிவு பண்ணியிருக்கோம். அவ்வளவுதான். அதுக்காக அவரை ஏதோ திட்டமிட்டு நான் வளர்த்துவிடுறதா நினைக்கறதெல்லாம் கற்பனை” என்றார் தனுஷ். நானும் ரவுடிதான் வெற்றிக்கு பிறகும் கூட இவரும் அந்த படத்தின் இயக்குனர் விக்னேஷ் சிவனும் பேசிக் கொள்ளவில்லையாம்.

நன்றி என்பது மூன்றெழுத்து. காதல் என்பதும் மூன்றெழுத்து. ஆனால் எது பெருசு? இதோ ஒருத்தருகொருத்தரை பேசவிடாம வச்சுருக்கே, அதுதான் பெருசு!

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
டாப் ஹீரோக்களுக்கு வெட்கம்… வெட்கம்… மேலும் வெட்கம்! ஒரு கோடியை அள்ளித்தந்த அக்ஷய் குமார்!

‘மாற்றி மாற்றி நெருக்கடி கொடுத்து பொட்டிய தொறக்க வச்சுருவானுங்க போலிருக்கே...’ என்று முன்னணி ஹீரோக்கள் சிலர் மனசுக்குள் புலம்பிக் கொண்டிருந்தாலும் ஆச்சர்யமில்லை. ஏனென்றால், அண்டை மாநில ஹீரோக்களின்...

Close