குழந்தைகளின் பிடிவாதம்! தனுஷ் தேடிய ஜுராசிக் பார்க்?

ide

ஊருக்கு ஹீரோவாக இருந்தாலும், பிள்ளைகள்தான் ஹீரோக்களுக்கே ஹீரோ! அவர்களின் பிடிவாதம் தாங்க முடியாமல் அல்லாடிவிட்டாராம் தனுஷ். அதுவும் ஜுராசிக் பார்க் ஸ்பெஷல் ஷோவுக்காக. சமீபத்தில் சென்னை என்எப்டிசி அலுவலகத்திற்கு போன். பேசியவர் தனுஷ். போனை கேஷுவலாக எடுத்த அலுவலக ஊழியர், ‘ஹல்ல்லாவ்வ்வ்வ் ஆரது…?’என்று கேட்க, நான் தனுஷ் பேசுறேன் என்றதாம் குரல். சார்… நீங்க அந்த தனுஷா என்று கேட்டு கன்பார்ம் பண்ணிக் கொண்ட ஊழியருக்கு உடம்பெல்லாம் ஜில். பின்னே? பேசியவர் அவ்ளோ பெரிய ஆக்டர் தனுஷ் என்றால் ஆடாதா உடம்பெல்லாம். சொல்லுங்க சொல்லுங்க என்றார்.

வேறொன்னுமில்ல. குழந்தைங்க ஜுராசிக் பார்க்கணும்னாங்க. நான் க்யூப்புக்கு சொல்லிட்டேன். உங்க தியேட்டர்லதான் பார்க்கணும் என்று சொல்ல, சமுக்காள விரிப்போடு வரவேற்பு கொடுத்ததாம் என்எப்டிசி தியேட்டர்.

ஸ்பெஷலாக மும்பையில் பணம் கட்டி, தனது குழந்தைகளுடன் குழந்தையாக இந்த படத்தை பார்த்து சந்தோஷப்பட்டிருக்கிறார் தனுஷ்.

Read previous post:
சொத்துக்களை விற்றாவது ரஜினி முருகன் படத்தை ரிலீஸ் பண்ணுவேன்! லிங்குசாமி கம்பீரம்…

ஒரே நாளில் எவரெஸ்ட்டில் ஏற்றவும், மறுநாளே கார்ப்பரேஷன் குப்பை லாரியில் இறக்கவும் துணிந்த இடம் சினிமாதான். இங்கு பல பேரை பேப்பர் கப் போல கசக்கி எறிந்திருக்கிறது...

Close