பரவை முனியம்மாவுக்கு ஐந்து லட்சம்! தனுஷின் தாராள மனசு

யார் சிறந்த மனிதாபிமானியோ, அவர் திசை நோக்கி வணங்குவோம்… என்று யாராவது கிளம்பினால், தனுஷ் நிற்கும் திசையை வணங்கலாம். ஏனென்றால் இன்று அவர் செய்திருக்கும் உதவி காலத்தினார் செய்த சிறு உதவியல்ல. மிக மிக பெரியது.

சிங்கம் போல குரல் உயர்த்தி பாடிய நாட்டுபுற பாடகி பரவை முனியம்மா படுத்த படுக்கையாக கிடக்கிறார். பெரும் துயரத்திலிருக்கும் அவரை மீட்டெடுக்கும் சக்தி கணிசமான நிதி இருந்தால் மட்டுமே சாத்தியம். விஷால் ஐந்தாயிரமும், சரத்குமார் 25 ஆயிரம் கொடுத்து ஓரளவுக்கு அவரது சுவாசத்தை எளிதாக்கியிருக்கிறார்கள். இந்த நேரத்தில்தான் தனுஷ், அள்ளிக் கொடுத்திருக்கிறார்.

நடிகர் நடிகைகள் இனத்திற்கு அந்த இனத்தை சார்ந்த சிலரே கிள்ளிக்கோ, பறிச்சிக்கோ என்று உதவி வரும்போது, மிகுந்த மன நிறைவுடன் தனுஷ் தந்த இந்த ஐந்து லட்சம் மகத்தானது. இவரைப்போலவே கடமை பெற்ற இன்னும் சில கரங்கள் கை தூக்கிவிட்டால், பரவை முனியம்மா பழைய முனியம்மாவாக எழுந்து மீண்டும் பாட கிளம்பினாலும் கிளம்புவார்.

Read previous post:
நயன்தாரா- டைரக்டர் காதல்! உறுதிபடுத்திய ஆர்யா?

நயன்தாராவுக்கு இது எத்தனையாவது காதலோ, தெரியாது. ஆனால் அவர் ஒவ்வொரு முறையும் யாரையாவது காதலிக்கும் போதெல்லாம், அதை ஏதோ தேசத்திற்காகவே செய்யப்பட்ட மெகா சைஸ் பூங்கொத்தாக எண்ணி...

Close