தனுஷ் பர்த் டே புறக்கணித்தாரா சிவகார்த்தியேன்? அல்லது… அழைக்கவே இல்லையா?

ஒரு நாளும் இல்லாத திருநாள்’ என்பார்கள் சில நாட்களை மட்டும்! அப்படியொரு திருநாள்தான் இந்த வருட பிறந்த நாள் தனுஷுக்கு! வேலையில்லா பட்டதாரி தாறுமாறான ஹிட். குறைந்த விலைக்கு தயாரிக்கப்பட்டு நிறைந்த விலைக்கு விற்கப்பட்ட படமும் கூட. மார்க்கெட்டில் தனுஷ் எத்தனையாவது இடத்தில் இருக்கிறார் என்றெல்லாம் சந்தேகம் கிளப்பிய அத்தனை முகங்களுக்கும் கரும்புள்ளி பூசிய தனுஷ், தன் பிறந்த நாளை எவ்வளவு விமரிசையாக கொண்டாடியிருப்பார்!

யெஸ்… அப்படிதான் கொண்டாடினார். திரையுலக நண்பர்கள் அத்தனை பேரையும் அழைத்திருந்தார். தனக்காக சித்தார்த்திடம் வெறுப்பை வாங்கிக் கட்டிக் கொண்ட ஜிகிர்தண்டா தயாரிப்பாளர் கூட அங்கிருந்தார். தனுஷின் பரம எதிரி என்று ஒரு காலத்தில் விமர்சிக்கப்பட்ட சிம்புவும் வந்திருந்தார். ஆனால் வார்த்தைக்கு வார்த்தை ‘தனுஷ் அண்ணா’ என்று தன் பெயரை உச்சரிக்கும் சிவகார்த்திகேயனை இந்த பிறந்த நாள் பார்ட்டிக்கு அழைக்கவே இல்லையாம் தனுஷ்.

தற்போது தனுஷால் தயாரிக்கப்பட்டு வரும் டாணா படத்தின் ரிலீசுக்கு பிறகு இருவருக்கும் நடுவில் விட்ட குறை தொட்ட குறைகூட இருக்காது என்று கணிப்பவர்களுக்கு இந்த செய்தி அவலாக பொறிந்து அனலாக தகித்துக் கொண்டிருக்கிறது. முள்ளு குத்துனாலே கூட அதை கத்தி குத்து லெவலுக்கு கலவரமாக்குவாய்ங்க. இந்த லட்சணத்துல இது வேறயா?

அவரு கூப்பிட்டாரு, இவருக்குதான் வேலையிருந்திச்சு! போதுமா? விடுங்கப்பா….!

1 Comment
  1. dinesh says

    sivakarthikeyan went to the function..siva had confirmed it on twitter today..and also dhanush told in an interview last week no one can separate him and siva..friends forever…admin please change the news..

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
மைக்குலதான் பாப்பா… படத்துல டாப்போ டாப்புப்பா! ஒரு ஹீரோயினின் வெட்கம்!

ஒரு படத்திற்கு தலைப்பு வைப்பதில் துவங்குகிறது அப்படம் குறித்த க்ளைடாஸ்கோப்! என்னவாக இருக்கும் என்று எதிராளியை உசுப்பிவிட்டால் போதும், அப்படம் ஹிட்! அப்படிதான் இருக்கிறது ‘8 mm’...

Close