‘ அசிங்கப்படுத்துறாரா தனுஷ்? ’ அக்காவிடம் சண்டை போட்ட ரஜினி மகள்

நாடு முழுக்க பட்டாசு வெடித்துக் கொண்டிருக்கிறது வேலையில்லா பட்டதாரி. ஆனால் வேறொரு இடத்தில் இதே படம் உறவுகளுக்கு நடுவில் குண்டு வைத்திருப்பதாக கூறுகிறது கோடம்பாக்கத்தின் குறுகுறு டைம்ஸ்! படத்தில் சாதாரணமாக ஹீரோ பஞ்ச் அடிப்பது போல ஒரு டயலாக் வந்தால் கூட இது அந்த ஹீரோவை குறிக்குமோ, இந்த ஹீரோவை குறிக்குமோ என்று பூதக்கண்ணாடி போட்டு புரளி கிளப்பி வருகிறது உலகம். இந்த பொல்லாத உலகத்திற்கு இன்னும் கொஞ்சம் தீனியை போட்டு ஏணியை கவிழ்த்திருக்கிறார் தனுஷ்.

வேறொன்றுமில்லை, படத்தில் தனுஷுக்கு வில்லனாக நடித்திருக்கும் இளைஞருக்கு ‘அஸ்வின்’ என்று பெயர் வைக்கப்பட்டிருக்கிறது. இதுதான் பிரச்சனையே! இது இயக்குனரின் மிஸ்டேக்கா, மறைமுக இயக்குனராக கருதப்படும் தனுஷின் மிஸ்டேக்கா? தெரியவில்லை. ஆனாலும் பொங்கி வெடிக்கிறது பேமிலி சுச்சுவேஷன். தனுஷின் மனைவி ஐஸ்வர்யாவின் தங்கை கணவர்தான் இந்த அஸ்வின். கடந்த சில மாதங்களாகவே ரஜினியின் மூத்த மருமகனான தனுஷூக்கும் இளைய மருமகனான அஸ்வினுக்கும் ஒத்துப் போவதில்லையாம். வீட்டுக்குள் மட்டுமே நிகழ்ந்து வந்த அந்த பனிப்போரைதான் படத்திற்குள்ளும் கொண்டு வந்துவிட்டார் தனுஷ் என்று பொங்குகிறாராம் இளைய மகள்.

வேலையில்லா பட்டதாரி பார்த்த நாளிலிருந்தே தன் அக்காவிடம் இந்த விஷயத்தை சொல்லி நீதி கேட்டு வருகிறாராம் சௌந்தர்யா. ஆனால் படம் பெருத்த வெற்றி பெற்றதற்கு பிறகு யார் என்ன சொல்லி என்ன ஆகப் போகிறது? இருந்தாலும், பிரச்சனை ரஜினியின் காதுக்கும் சென்றிருப்பதாக காதை கடிக்கிறது தகவல்!

ஓட்டுக்குள்ள இருக்கிற வரைக்கும் முட்டை! உடைஞ்சா ஆம்லெட்டோ, ஆஃப் பாயிலோ… அது சமையல்காரன் சவுரியமாச்சே!

1 Comment
  1. BALAMURUGAN says

    PL. DONT; ENTER OUR GOD SUPER STAR RAJINI’S FAMILY.
    KINDLY AVOID RAJINI FAMILY NEWS.

    LONG LIVE OUR SUPER STAR THALAIVAR RAJINI.

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
நெடுஞ்சாலை ஷிவேதாவை பிடித்திருப்பது பேயுமல்ல, பிசாசுமல்ல, அது வேற…! ஜீரோ பட இயக்குனர் விளக்கம்

‘நெடுஞ்சாலை’ படத்தில் நடித்த ஷிவேதா, ‘அச்சு அசலாக நயன்தாரா மாதிரியே இருக்கிறாரப்பா...’ என்று அந்த படம் வந்த புதுசில் பாராட்டிய உள்ளங்களுக்கு ‘அவருக்குள்ளும் ஒரு பேய் இருக்கிறாள்’...

Close