திடீர் புரளி கிளப்பும் தம்பதி! ரெண்டுல எந்த மூஞ்சிப்பா தனுஷ் மூஞ்சி?
சீட்டுக் கம்பெனி சீசன் மூடிந்தது. அதற்கப்புறம் ஈமுக்கோழி சீசன் வந்தது. “பன்றியில இன்வெஸ்ட் பண்ணுங்க. பன்னிக்குட்டி மாதிரியே பல குட்டி வட்டிக்கு உத்தரவாதம்”னு வேறொருத்தன் கிளம்புவான். மக்களும் பணத்தை கொட்டிவிட்டு பிறகு ‘ஞே’ என்று முழிப்பார்கள். இது எந்த வகையில் சேர்த்தி என்று தெரியவில்லை. தனுஷ் மாதிரியான பெரிய வீட்டு பிள்ளைகளை குறி வைத்து கிளம்பிவிட்டார்களோ என்கிற அச்சம்தான் வருகிறது மேற்படி தம்பதியை பார்த்தால்!
சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தை சேர்ந்த கதிரேசன், மீனாள் தம்பதியினர் “எங்கள் மகன்தான் தனுஷ்” என்று போலீசில் புகார் கொடுத்திருக்கிறார்கள். (தனுஷுக்கு ஒரு வக்கீல் நோட்டீஸ் அனுப்பி நேர்ல ஆஜராக வச்சுட்டா, பரபரப்பு கிளப்பிய மாதிரியும் ஆச்சு. அவரை நெருக்கத்தில் பார்த்த மாதிரியும் ஆச்சு. செய்ங்க செய்ங்க)
“1985 ல் எங்களுக்கு மகனா பிறந்தார் தனுஷ். நாங்க கலையரசன்னு பேர் வச்சு வளர்த்தோம். 11 ம் வகுப்பு படிக்கும் போது சரியா படிக்கலைன்னு திட்டினோம். ஓடிட்டார்” என்கிறது இந்த தம்பதி. அவர் ஓடிப்போன ஆண்டு 2002 என்றும் அடிஷனல் பிட் போடுகிறார்கள். சென்னை வந்து கஸ்தூரிராஜாவையும் பார்க்க முயன்றார்களாம். அவர் பார்க்கவில்லை என்று நீள்கிறது கதிரேசன் மீனாள் தம்பதியின் ஸ்டேட்மென்ட்.
இது எத்தனை வடிகட்டிய பொய் என்பதே தெரியாமல் எப்படி காவல் துறையினர் புகாரை பெற்றுக் கொண்டார்கள் என்பது புரியவில்லை. தனுஷ் ஊரிலிருந்து ஓடி வந்ததாக கூறப்படும் 2002 ம் வருடம்தான் அவர் முதலில் நடித்த ‘துள்ளுவதோ இளமை’ படம் திரைக்கு வந்தது. அதற்கு முன்பு அப்படம் மூன்று வருடங்களாக தயாரிப்பில் இருந்தது. பணத்தை புரட்டி புரட்டிதான் படம் எடுத்துக் கொண்டிருந்தார்கள் என்பது சினிமா இன்டஸ்ட்ரிக்கு நன்கு தெரியும். அப்படியிருக்க… அந்த மனநோயாளி தம்பதிக்கு முறையான ‘கவுன்சிலிங்’ கொடுப்பதை விட்டு, சென்னை வரைக்கும் அலைய வைத்துவிட்டார்களே…
பின்குறிப்பு- அந்த தம்பதியின் முக ஜாடைக்கும் பொருந்தவில்லையே தனுஷ்? அங்கேயே பஞ்சாயத்து அடிபட்டு போச்சேய்யா…
To listen audio click below :-0