ஆசைப்பட்டார் அஜீத்! தவற விட்டார் தனுஷ்?

யாருடனும் ஒட்டுவதில்லை, எந்த நிகழ்ச்சிக்கும் வருவதில்லை என்றெல்லாம் அஜீத் பற்றி விமர்சனங்கள் வந்தாலும், இன்டஸ்ட்ரியின் இண்டு இடுக்குகளை கூட அறிந்து வைத்திருக்கிறார் அவர். நாள்தோறும் நடக்கும் தகவல்கள் அவரது காதுகளுக்கு செல்லாமல் இருப்பதில்லை. தனுஷின் கிராப் என்ன, சிம்புவின் பிளாப் என்ன, ஆர்யாவின் உயரம் என்ன, விஷாலின் வேகம் என்ன என்று எல்லாவற்றையும் அவதானித்து வரும் அவர், தனது மனைவியின் தங்கை ஷர்மிலி வந்து, “தனுஷுடன் நடிக்க ஒரு ஆஃபர் வந்திருக்கு. செய்யலாமா?” என்று கேட்டால், “போகாதே…” என்றா சொல்லுவார்?

பரிபூரணமாக ஆசிர்வதித்தாராம். அதுவும் தனுஷின் சமீபகால வெற்றிகள், அவரது வேகம், முன்னேற்றம் எல்லாவற்றையும் பற்றி ஷர்மிலிக்கு எடுத்துச் சொல்லி, “இது நல்ல ஆஃபர். தாராளமா நடி” என்று அனுப்பி வைத்ததுடன், ரஜினியின் மேக்கப் மேனையும் தன் இன்புளுயன்சில் வரவழைத்து ஷர்மிலிக்கு துணையாக அனுப்பி வைத்தார். ‘கொடி’ படத்தின் டைரக்டர் துரை.செந்தில்குமாரும் ஷர்மிலிக்கு முழுக்கதையையும் சொன்னாராம். அதற்கப்புறம் சில வாரங்களில் நடந்ததுதான் பொல்லாத திருப்பம். தனுஷின் ஆலோசனைப்படி கதையில் ஏராளமான மாற்றங்களை கொண்டு வந்தார்கள்.

அதுவரைக்கும் படத்தில் ஒரு ஹீரோயின்தான் என்ற நிலைமை, சட்டென மாறி இரண்டு ஹீரோயின் என்றாகிவிட்டதாம். இந்த விஷயம் முறையாக ஷர்மிலிக்கும் தெரிவிக்கப்பட்டதாம். ஷர்மிலியின் அப்பா பாபு ஒரு காலத்தில் தன் இரு மகள்களுக்கும் அற்புதமாக கால்ஷீட் பார்த்து அருமையாக படப்பிடிப்புக்கு அனுப்பி வந்தவர். மகள்களுக்கு எவ்வித குறையும் நேராமல் கவனமாக பார்த்த வந்தவரல்லவா? ஷர்மிலியின் ரீ என்ட்ரி இரண்டு ஹீரோயின்களில் ஒருவராக வந்துவிடக் கூடாது என்று நினைத்தாராம். இந்த படத்திலிருந்து என் மகள் விலகிக் கொள்கிறார் என்று அவரே கூறிவிட, அதற்கப்புறம் வந்தவர்தான் கீர்த்தி சுரேஷ்.

கிடைக்கிற பஸ்ல எல்லாம் ஏறுனா போக வேண்டிய ஊர் வந்து சேராது என்பதை சற்று பலமாகவே தெரிந்து வைத்திருக்கிற பேமிலி. ஏமாத்த முடியுமா?

1 Comment
  1. அந்துவன் மொந்தைக்கள்ளு says

    ஷாமிலி!

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
அடப்பாவிகளா… இவரையும் கெடுத்துட்டீங்களா?

வின் ஸ்டார், கன் ஸ்டார், விக்கல் ஸ்டார், முக்கல் ஸ்டார், கோல்டு ஸ்டார், கொய்யாக்கா ஸ்டார் என்று தெருவுக்கு தெரு ஸ்டார்கள் இருக்கிறார்கள் கோடம்பாக்கத்தில். வேடிக்கை என்னவென்றால்,...

Close