தனுஷ் புஸ்பா புருசன் பிணக்கு தீர்ந்ததா?
‘வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்’ படம் வந்தாலும் வந்தது. அதில் வரும் ‘புஸ்பா புருஷன்’ கேரக்டர் மக்கள் மத்தியில் செம ஹைப் ஆகிக்கிடக்கிறது. அந்த கேரக்டரில் நடித்த சூரியை தமிழ்சினிமாவிலிருக்கும் ஒரு இயக்குனருக்கு நிகராக்கியதுடன், அந்த இயக்குனரின் இமேஜை கிண்டி கிழங்கெடுத்துக் கொண்டிருக்கிறார்கள் சமூக வலைதள சண்டாளர்கள். இவர் புஸ்பா புருஷன் என்றால், புஸ்பா யாராம்? வேறு யார்… நயன்தாராதான். (ஓ… புரிஞ்சுருச்சு)
விக்னேஷ் சிவனை இப்படி பெயின்ட் அடித்து பட்டி பார்த்துக் கொண்டிருக்கும் அதே சமூக வலைதள வம்பாளர்களுக்கு அவரது ஒரிஜனல் புகழ் எப்படி தெரியப் போகிறது? நிஜத்தில் அசாத்திய திறமைசாலி விக்னேஷ் சிவன் என்பதை நயன்தாராவை விட அதிகம் அறிந்தவர் தனுஷ்தான். எப்படி தெரியுமா? தமிழ்சினிமாவில் கலெக்ஷனை வாரிக்குவித்த வேலையில்லா பட்டதாரி படத்தை இயக்கியவர் ஒளிப்பதிவாளர் வேல்ராஜ்தான் என்று உலகம் நம்பிக் கொண்டிருக்கிறது. நிஜத்தில் அந்த படத்தை இயக்கியதே விக்னேஷ்சிவன்தான் என்கிறார்கள் அப்படத்தில் வேலை பார்த்த சிலர்.
அவரது திறமையை கண்ணெதிரிலேயே கண்டவர் என்பதால்தான், தனது தயாரிப்பில் உருவான நானும் ரவுடிதான் படத்தை இயக்கும் வாய்ப்பை அவருக்கு அளித்தார் தனுஷ். அவரது நம்பிக்கை வீண் போகவில்லை. படம் ஹிட். ஆனால் தயாரிப்பு செலவு தனுஷை அந்த வெற்றியை முழுசாக அனுபவிக்க விடாமல் செய்துவிட்டது. பத்திரிகையாளர்களிடம் ஓப்பனாகவே, இந்த படத்தை இயக்குவதற்கு வாய்ப்பளித்த எனக்கு ஒரு நன்றி கூட சொல்லவில்லை விக்னேஷ் சிவன் என்று குமுறினார் தனுஷ். இருவரும் பேசிக் கொள்வதும் இல்லை. பிலிம்பேர் விருது விழாவில் கூட புருஷனுடன் கைகோர்த்து வந்த புஸ்பா, தனுஷை வஞ்சப்புகழ்ச்சியால் வாரிவிட்டுதான் போனார்.
இந்த நிலையில்தான் இவர்களுக்கு இடையேயான பிணக்குக்கு ஃபுல் ஸ்டாப் வைக்கப்பட்டிருக்கிறது. வைத்தவர் யுவன்ஷங்கர்ராஜா. இவர் இசையமைத்த யாக்கை படத்தில், ஒரு பாடலை எழுதியிருக்கிறார் விக்னேஷ் சிவன். “உனக்கு வெய்ட் பண்ணி என் பாடி வீக் ஆகுது…பேஸ்மென்ட் ஷேக் ஆகுது…ஹார்ட் பிரேக் ஆகுது” என்ற அந்த பாடலை தன் இனிய (?) குரலால் பாடி இன்பம் ஏற்றியிருக்கிறார் தனுஷ்.
இது விக்னேஷ் சிவன் எழுதிய பாடல் என்பது தெரிந்தும், மனசுக்குள் இருந்த எரிமலையின் மீது வாட்டர் பாட்டிலை ஓப்பன் பண்ணி கொட்டிவிட்டு பாடியிருக்கிறார் தனுஷ் என்றால், சற்றே இறங்கி வந்திருக்கிறார் என்றுதானே அர்த்தம்? ஆக மொத்தம் உங்கள் இருவருக்குமான பிணக்கு தீர்ந்துவிட்டதாக எண்ணி கணக்கை குளோஸ் பண்ணிவிடலாமா படைப்பாளிஸ்?
சொல்லுங்க சார் சொல்லுங்க!
Solli Tholaiyen Ma – Yaakkai | Official Lyric Video
https://youtu.be/ZzYhtfnCTQc