கேரக்டர் தம்மடிச்சா நான் என்ன பண்ணுறதாம்? தனுஷ் பதில்…

‘டங்கா மாரி ஊதாரி… புட்டுகினே நீ நாறி’ யிலிருந்தே ரி- மேல் காதலாகி கிடக்கிறாரோ என்னவோ? நாளைக்கு ரிலீசாகவிருக்கும் தனுஷின் புதுப்படத்தின் பெயரும் மாரி. இப்படத்தின் இயக்குனர் பாலாஜி மோகன். காதலில் சொதப்புவது எப்படி? வாயை மூடிப் பேசவும்… என்ற இரண்டே படங்கள்தான். தமிழ்சினிமாவின் உருப்படியான இயக்குனர்களில் ஒருவராக்கிவிட்டது அவரை. இருந்தாலும் ஆக்ஷன் படங்களை இயக்கும்போதுதான் ஒரு டைரக்டருக்கு அடுத்த பரிணாமம் கிடைக்கிறது என்று நம்பியிருக்கலாம்… அவரது மூன்றாவது படமான மாரி, சரியான ஆக்ஷன் படம். வட சென்னை தாதாவாக நடிக்கிறார் தனுஷ்.

‘தனுஷ் சார்ட்ட மூணு கதையோட ஸ்கிரிப்ட கொடுத்துட்டேன். இதுல நீங்க எதை வேணும்னாலும் ச்சூஸ் பண்ணுங்க. ஆனால் இதுல ஒரு கதை உங்களை நினைச்சு எழுதப்பட்டதுன்னு சொன்னேன். அவரு மூணு கதையையும் சின்சியரா படிச்சுட்டு இந்த கதையை செலக்ட் பண்ணினார். ஆச்சர்யம் என்னன்னா நான் அவரை நினைச்சு எழுதுன கதையும் இதுதான்’ என்று மாரியின் முன்கதை சுருக்கம் சொன்னார் பாலாஜி மோகன்.

படம் குறித்து நிறைய பேசினாலும், கடைசியில் கேள்வி பதில் நேரம். ட்ரெய்லர், டீசர்ல நீங்க தம்மடிச்சுட்டே வர்ற மாதிரி சீன் இருக்கு. அது அவசியமா? இந்த கேள்விக்கு சற்று நிதானமாகவே உள் வாங்கி பதில் சொல்ல ஆரம்பித்தார் தனுஷ். ‘சார்… நான் அநேகன் படத்தில் நடிக்கும் போது ஒரு சீன்ல கூட தம்மடிக்கல. ஆனால் இதுல லோக்கல் தாதாவா நடிக்கிறேன். ஒரு தாதாவின் இயல்பு எப்படியிருக்கும்னு உங்களுக்கு தெரியும். இந்த சீன்ல அந்த கேரக்டர் என்ன கேட்குதோ, அதை நான் செய்யணுமில்லையா? அதுமட்டுமில்ல…. அடிப்படையில் நான் தம்மடிக்காதவன். தண்ணியடிக்காதவன். இந்த படத்திற்காக தம்மடிக்க வேண்டியதாப் போச்சு’ என்றார்.

‘படத்தில் ஒரு காட்சியில் நீங்க ‘செஞ்சுருவேன்’ என்று சொல்றீங்க. இதை பார்த்துட்டு சின்ன சின்ன குழந்தைகள் கூட ‘செஞ்சுருவேன்’னு சொல்லுது… இதையும் தவிர்த்திருக்கலாமே? உங்களுக்குன்னு சமூக பொறுப்பு வேணாமா?’ என்ற இன்னொரு கேள்விக்கு சற்றே ஷாக் ஆனார் தனுஷ். ‘சார்… உங்களை மாதிரியெல்லாம் பறந்து விரிந்து யோசிக்கிற அளவுக்கு நான் பெரிய ஆள் இல்லே. இந்த ஸ்கிரிப்ட்ட கையில் கொடுத்து படிக்க சொல்றாங்க. அதுல வர்ற டயலாக்கை பேசி நடிக்கிறேன். அவ்வளவுதான் நான்…’ என்றார் ரொம்ப ரொம்ப அடக்கமாக!

இந்த அடக்கம் ஒண்ணும் நடிப்பில்லையே சாமீ…?

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
பேருதான் மஞ்சள்! பேக்ரவுண்டு டண்டணக்கா!

மங்களகரமா இருக்கட்டுமே என்று ‘மஞ்சள்’ என்று தலைப்பு வைத்திருக்கிறார்கள் ஒரு படத்திற்கு. ஆனால் கதை? அதன் களம்? எழவு வீடு பாஸ்... எழவு வீடு! ஏற்கனவே விழா,...

Close