தனுஷும் அந்த நால்வரும்…! எல்லை தாண்டிய தொல்லையாம்ல?

“மலை ஆட்டை கொடுத்தா கூட சொளையா உரிச்சு தின்ருவாய்ங்க போலிருக்கு… தின்னட்டும் தின்னட்டும். ஆனால் அவங்களையெல்லாம் அழைச்சுட்டு வர்ற தம்பி ரெண்டு இட்லிக்கு மேல தொட மாட்டேங்குது..’‘. என்று தனுஷ் குறித்து டரியல் ஆகுது தயாரிப்பாளர்கள் வட்டாரம். வேறொன்றுமில்லை. தனக்கு பாதுகாப்பு அதிகாரிகள் சிலரை தனுஷே நியமித்து வைத்திருக்கிறார். கூட்டத்தில் எல்லாரும் கையை நீட்டி, ‘ஒரு ஆட்டோகிராப்.. ப்ளீஸ்’ என்பதால்தான் இந்த பாதுகாப்பு அரண். அதுவும் இந்த செல்ஃபி கலாச்சாரம் வந்தாலும் வந்தது. மாசக் கணக்காக பல் விளக்காத ஆசாமிகள் கூட, தங்கள் திருவாயை அகலமாக மலர்ந்து கொண்டே தனுஷை நெருங்குவதால், துணுக்குறுகிறாராம் அவர். இவங்களால வைரஸ் தாக்குதலுக்கு ஆளாகி விடுவோம் போலிருக்கே? என்று அஞ்சுகிறாராம். இந்த செல்ஃபி கொள்ளையர்கள் பிடியிலிருந்து விடபடதான் இத்தகைய குண்டர்கள் சூழ வலம் வருகிறாராம் தனுஷ்.

அவருடைய அயர்ன் பாடி… அது துரு பிடிக்காமல் பார்த்துக் கொள்வது அவர் பொறுப்பு! நாலு பேர் என்ன, நாற்பது பேரை சுற்றி சுற்றி நிக்க வச்சுக்கட்டும். ஆனால் தம்பி பில்லை நம்ம தலையில் கட்டுதே… என்பதுதான் தயாரிப்பாளர்களின் கடும் வயிற்று வலியாக இருக்கிறது. சும்மாயில்லை. ஒவ்வொரு ஆசாமிக்கும் தினப்படி பில் மூவாயிரம் ரூபாயாம். அதுவே தினந்தோறும் 12 ஆயிரம் ஆகிவிடுகிறது. அவர்கள் சாப்பிடும் சாப்பாடு, இன்னும் கிலியை ஏற்படுத்துகிறதாம்.

லஞ்ச் ஹவர் வந்தாலே, தொடை நடுங்கிப் போகிறார்களாம் தொழிலாளர்கள். தின்னது போக அவங்க வைக்கிற மிச்ச சொச்சம்தான் நமக்கு என்பதால்தான் இந்த நடுக்கம்!

பென்சில் ரொம்ப சாஃப்டுதான். அதை வச்சுக்குற பாக்ஸ்சுக்குதான் கொள்ளை அலட்டல்? கொடுமைடா சாமீய்.

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
விஜய் விஷால் ஒரு ‘ திடீர் ’ சமரசம்!

எப்போது விஜய் ரசிகர் மன்றத்தின் தலைவர் ஜெயசீலன், விஷால் மன்றத்திற்கு தாவி முக்கிய பொறுப்புக்கு வந்தாரோ, அன்றிலிருந்தே விஷாலின் போக்கில் படு பயங்கர மாற்றம். அப்படியே விஜய்யை...

Close