டைரக்டர் பாலா தலைமையில் ஜோக்கர் ராஜு முருகனுக்கு ரகசிய திருமணம்!
எழுத்தும் வாழ்வும் வேறல்ல, என்பதை நிரூபிக்கிற படைப்பாளிகள் ரொம்ப ரொம்ப குறைவு. ஆனால் ராஜு முருகன் அப்படிப்பட்டவரல்ல! புரட்சிகரமான சிந்தனையை வெறும் புஸ்தகத்தில் எழுதுவதோடு நிறுத்திக் கொள்ளாமல், வாழ்விலும் காட்டியிருக்கிறார். யெஸ்.. திருமணமாகி வெளிநாட்டுக்கு போய் வாழ்ந்த தனது முன்னாள் தோழியை, அவரது டைவர்சுக்குப் பின் மனைவியாக்கிக் கொண்டிருக்கிறார்.
சில வருடங்களுக்கு முன் சன் குழும தொலைக்காட்சியில் அனைவரையும் கவரும் மென் சிரிப்போடு நிகழ்ச்சிகளை நடத்தி வந்த ஹேமா சின்ஹாவை திருமணம் செய்து கொண்டார் ராஜுமுருகன். அவரது நெருங்கிய நண்பர்கள் சிலர் மட்டும் கலந்து கொண்ட இந்த திருமணத்தை பிரபல இயக்குனர் பாலா நடத்தி வைத்தார். மேற்படி திருமணம் பெசன்ட் நகர் முருகன் கோவிலில் நடந்தது.
இதற்கு முன்பு குக்கூ என்ற படத்தை இயக்கியிருந்தாலும், சமீபத்தில் அவரது இயக்கத்தில் வந்த ஜோக்கர், தமிழ்சினிமாவின் மிக முக்கியமான படங்களில் ஒன்றாக அமைந்தது. அப்படம் வெளிவந்து சில வாரங்களுக்குள் நடைபெற்றிருக்கும் இந்த திருமணம், ராஜுமுருகனை பொருத்தவரை ‘கண்ணா ரெண்டு லட்டு திங்க ஆசையா?’ கதைதான்!
பின் குறிப்பு- ஹேமா சின்ஹா என்றதும், ஏதோ வட நாட்டுப் பெண் என்று யாரும் நினைத்துவிட வேண்டாம். மிசஸ் ராஜுமுருகன் பிறந்தது வளர்ந்தது படித்தது எல்லாமே மதுரைதானாம். அப்படியென்றால், ராஜுமுருகன் மண்ணின் மைந்தன்தான்!
To listen the audio click below :-
காதலுக்கு கண்ணில்லை என்பதை மீண்டும் நிரூபித்துள்ள ஜோடி…