கை வைக்காத பனியன்தான் காஸ்ட்யூம்! அரண்டு ஓடிய நடிகைகளுக்கு மத்தியில் அருந்ததியின் தில்!
அருந்ததியே நமஹ…. அரைகுறை கவர்ச்சியே நமஹ… ஆஃப் டிரஸ்சே நமஹ… என்று கடந்த ஒரு வருட காலமாகவே தமிழ்நாட்டு இளைஞர்களை ஒரு படம் தவிக்க விடுகிறது என்றால் அது ‘நேற்று இன்று’ என்ற படம்தான். படத்தில் வரும் அருந்ததியின் கவர்ச்சி ஸ்டில்களால்தான் பசங்க ஏரியாவுல பரபரப்பு. இதுபோன்ற ஸ்டில்களை பிரஸ்சில் உலவ விட்ட இயக்குனர் பத்மா மகன், படத்தை முடித்து சென்சாருக்கு கொண்டு போனது இப்போதுதான். படத்தை பார்த்தவர்கள் A சர்டிபிகேட்தான் கொடுப்போம் என்றார்களாம்.
என் படத்தில் ஏதோ அப்பிடி இப்பிடி காட்சிகள் இருந்தாலும், படத்தோட நோக்கம், களம், கவன ஈர்ப்பு எல்லாமே செக்ஸ் இல்லே சார். பின்ன எதுக்கு இந்த பிடிவாதம்? U சர்டிபிகேட் கொடுங்க. ரொம்ப கடன உடன வாங்கி படம் எடுத்துருக்கேன். பொழச்சிட்டு போறேன் என்று மாட்டு சந்தை யாவாரம் போல பேசியெல்லாம் பார்த்தாராம் டைரக்டர். ம்ஹும். கதை நடக்கவேயில்லை. A தான் என்பதில் திட்டவட்டமாக இருந்துவிட்டதாம் சென்சார்.
அப்புறமென்ன? காலேஜ் தெறக்கட்டும். படத்தை ரிலீஸ் பண்ணலாம் என்ற முடிவுக்கு வந்திருக்கிறார் பத்மாமகன். ஆனாலும் ஒரு வருத்தம். படத்தில் பிரசன்னா இருக்கார். விமல் இருக்கார். ரிச்சர்டு இருக்கார். இவங்களையெல்லாம் வச்சுகிட்டு நான் என்ன செக்ஸ் படமா சார் எடுக்கப் போறேன்? ஏன் சென்சார்ல இப்படி நடந்துகிறாங்க? யாருமே போய் உழைக்க தயாராக இல்லாத காட்டுக்குள்ளே போய் ஆறு மாதம் கஷ்டப்பட்டு படம் எடுத்திருக்கேன். அட்டப்பூச்சி கடிச்சிருக்கு, விஷப்பூச்சி ஊறியிருக்கு. எல்லா கஷ்டமும் படத்துல வர்ற சில காட்சிகளுக்காக தடம் மாறி பேசப்படுதே என்பதுதான் என்னோட வேதனை என்றார்.
தமிழ்சினிமாவில் இதுக்கு முன்னாடியும் சரி, பின்னாடியும் சரி, இப்படியொரு ஸ்கிரீன் ப்ளே ஸ்டைல் இருக்கவே முடியாது. இரண்டு பாதையாக துவங்குகிற கதை, ஓரிடத்தில் வந்து சேரும். அதற்கப்புறம் கதை இன்னும் பரபரப்பாகிவிடும் என்று சஸ்பென்ஸ் வைக்கும் பத்மாமகன், இதற்கு முன் அம்முவாகிய நான் என்கிற அவார்டு படம் இயக்கியவர்.
படத்தின் ஹீரோயின் அருந்ததிக்கும் உங்களுக்கும் ஏதோ பிரச்சனையாமே? என்றோம். ஒரு பிரச்சனைக்கும் வழியில்ல சார். ஏன்னா இந்த படத்துல நடிக்க நாங்க அழைச்ச எல்லா நடிகைகளிடமும், படத்துல உங்க காஸ்ட்யூம் இதுதான் என்று ஒரு கை வைக்காத பனியனைதான் காட்டினோம். பாதி பேரு முடியாதுன்னு ஓடுனாங்க. துணிச்சலா சரின்னு சொன்னவர் அருந்ததிதான். அவரே ஒத்துகிட்டு கவர்ச்சி காட்டிய பிறகு, எங்களுக்கு பிரச்சனை வர்றதுக்கு வழி ஏது? நீங்களே சொல்லுங்க என்று பிளேட்டை திருப்பி போட்டார்.
‘கை’ வச்ச பனியனா இருந்தாலாவது ‘வாயை மூட’ ஹெல்பா இருக்கும். கையே இல்ல. எங்க வாயை மூடுறது? நீங்க நல்லா திறங்க சார்… பசங்க பைத்தியம் பிடிச்சு திரியட்டும்!