இயக்குனர் இராம.நாராயணன் காலமானார்

பிரபல இயக்குனரும் தமிழ் திரைப்பட தயாரிப்பாளருமான இராம.நாராயணன் அவர்கள் காலமானார். 1980 ல் மீனாட்சி படத்தில் துவங்கி, 2013 ல் வெளிவந்த ஆர்யா சூர்யா வரை அவரது இயக்கத்திலும் தயாரிப்பிலும் வெளிவந்த படங்கள் ஏராளமானவை. ஆர்யா சூர்யா அவரது 125 வது படம். காரைக்குடியில் பிறந்த இராம.நாராயணன் தமிழில் மட்டுமல்ல, பல்வேறு மொழிகளிலும் வெற்றிப்பட இயக்குனராக வலம் வந்தவர்.

அவரது சுமை, சிவப்பு மல்லி போன்ற படங்கள் சமுதாய கருத்துக்களையும், ஆணித்தரமான முழக்கங்களையும் முன் வைத்தவை. தமிழ்சினிமா, ஹீரோக்களை நம்பியிருந்த காலத்தில் மிருகங்களை வைத்து எராளமான வெற்றிப்படங்களை தந்தவர் இராம.நாராயணன். மிக நல்ல மனிதர் என்றும் எளிமையானவர் என்றும் தனிப்பட்ட முறையில் பலராலும் வியக்கப்பட்டவர். திமுக வின் சட்டமன்ற உறுப்பினாராகவும் பணியாற்றியவர்.

தமிழ்த்திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தில் வெற்றிகரமாக பணியாற்றியவர். கடந்த சில மாதங்களாகவே உடல் நலம் குன்றியிருந்த இராம.நாராயணன் மருத்துவ சிகிச்சைக்காக சிங்கப்பூர் சென்றிருந்தார். சிகிச்சை பலனளிக்காமல் ஜுன் 22 ந் தேதி இரவு தனது இயக்கத்தை நிறுத்திக் கொண்டார்.

தமிழ் திரையுலகம் ஒரு நல்ல மனிதரை இழந்துவிட்டது.

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
வடகறி- விமர்சனம்

ஏட்டு சுரைக்காய் ‘கறிக்கு’ உதவாது என்பார்கள். கொஞ்சம் திருத்தி ‘வடகறிக்கு’ என்று வாசிக்கலாம். அப்படியொரு ஸ்கிரிப்ட்! ஆங்காங்கே வசனங்களால் கிச்சு கிச்சு மூட்டுவதால், காசு கொடுத்து டிக்கெட்...

Close