ஏ.ஆர்.முருகதாசுக்கு பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் அட்வைஸ்!

‘மான் கராத்தே’ படத்தின் கதை ஏ.ஆர்.முருகதாஸ் எழுதியதுதான். இந்த படத்தை இயக்கியது அவரது அசிஸ்டென்ட் திருக்குமரன். படத்தில் ஒரு பாடல் காட்சியில் தோன்றவும் செய்திருப்பார் முருகதாஸ். அதுவும் எப்படி தெரியுமா? பப்பில் ஆடிக் கொண்டிருக்கும் ஃபிகர்களை இவர் தள்ளிக் கொண்டு போவதைப்போல.

பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இந்த படத்தை பார்த்தாராம். உடனே முருகதாசுக்கு போன் செய்து படம் பற்றி பேசியவர், கடைசியில் அந்த அட்வைசையும் மறக்காமல் கூறியிருக்கிறார். ‘உங்களுக்குன்னு ஒரு நல்ல இமேஜ் இருக்கு. ஆனால் இப்படி போய் சின்னப்பிள்ளை மாதிரி ஆசைப்பட்டிருக்கீங்களே?’ என்று சிரித்தவர், ‘இனிமேல் இப்படியெல்லாம் வந்து இமேஜை கெடுத்துக் கொள்ளாதீங்க’ என்று கூற, சைலன்ட்டாக கேட்டுக் கொண்டாராம் முருகதாஸ்.

மான் கராத்தே கதைக்காகவும் அதில் ஒரு சீனில் நடித்ததற்காகவும் முருகதாஸ் போட்ட பில் எவ்வளவு தெரியுமா? ஐந்து கோடி! சரி, அதிருக்கட்டும்… கராத்தே ஹீரோ எப்படியிருக்கிறார்? முன்பு போலில்லை. காதில் விளக்கெண்ணை விட்டு கதை கேட்க ஆரம்பித்திருக்கிறார். இனிமேல் நடிக்கப் போகும் படத்தின் முழு ஸ்ரிப்ட்டும் தயாரான பிறகுதான் படப்பிடிப்புக்கே போவாராம்.

அறுவடை நீண்டகாலத்திற்கு தொடர்ந்தால் சரி…

Read previous post:
இந்த சலுகை ஒருத்தருக்கு மட்டும்… நட்புக்காக உருகிய சந்தானம்!

சிவகார்த்திகேயன் சந்தானம் இருவருக்குமிடையிலான ‘வார்’, தமிழ்சினிமாவின் டங்குவாரை அறுக்காமல் விடாது போலிருக்கிறது. நேத்து வந்த அவருக்கு இவ்வளவு பெரிய ஓப்பனிங்கா? அதுவும் கோடிக்கணக்கில் சம்பளமா? அப்ப நாந்தான்...

Close