சொன்ன இடத்துலேயே முடிச்சாச்சு! டைரக்டர் ஷங்கர் தந்த விளக்கம்!
அது அதை அந்தந்த இடத்தில் வைத்துதான் டீல் பண்ணனும் என்று நினைத்தாரோ என்னவோ? டைரக்டர் ஷங்கர் அதற்கான விளக்கத்தை அதே ஏரியவில் வைத்து கொடுத்துவிட்டார். அது இதுதான்.
கடந்த சில தினங்களுக்கு முன் ஐ படத்தின் ட்ரெய்லரை பாராட்டுகிறேன் பேர்வழி என்று செவனேன்னு இருந்த சங்கை எடுத்து பலம் கொண்ட மட்டும் ஊதினார் பிரபல இயக்குனர் ராம்கோபால் வர்மா. ‘ரஜினிகாந்த், ஜெயலலிதாவை விட செல்வாக்கு பெற்றவர் ஷங்கர் ’ என்று அவர் தனது ட்விட்டரில் கருத்து தெரிவிக்க, நல்லவேளை… சிங்கம் இப்போது தன் சொந்த பிரச்சனையால் அமைதியாக இருக்கிறது. ஒருவேளை இல்லாமல் போயிருந்தால், தேரை இழுத்து தெருவில் விட்டவருக்கும் பிரச்சனை. அதுவரைக்கும் ஓரமா நின்ற தேருக்கும் பிரச்சனை வந்திருக்கும்.
பதில் பேசினால்தானே அது பற்றி விவாதம் தொடரும். அமைதியா இருப்போம் என்று அமைதியாகவே இருந்துவிட்டார் ஷங்கரும். சமீபத்தில் ஐ படத்தின் தெலுங்கு வெர்ஷன் விழா ஒன்றுக்காக ஐதராபாத் சென்றிருந்தவர், அங்கு வைத்து இதற்கான விளக்கத்தை கொடுத்துவிட்டார். ராம்கோபால் வர்மா படங்கள் எனக்கு பிடிக்கும். ஆனால் அவர் ட்விட்டரில் தெரிவித்த கருத்தில் எனக்கு உடன்பாடில்லை என்று கூறிவிட்டார்.
ஆமாம்… வரவர தமிழ்நாட்டு விஷயங்கள் பலவற்றிலும் சீரியஸ்சா மூக்கை நுழைக்கிறாரே வர்மா? ஏன் ஏன்மா?